உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

புறப்பொருள்

“பல்சான் றீரே பல்சான் றீரே

செல்கெனச் சொல்லா தொழிகென விலக்கும் பொல்லாச் சூழ்ச்சிப் பல்சான் றீரே

யணில்வரிக் கொடுங்காய் வாள்போழ்ந் தட்ட காழ்போ னல்விளர் நறுநெய் தீண்டா தடையிடைக் கிடந்த கைபிழி பிண்டம் வெள்ளெட் சாந்தொடு புளிப்பெய் தட்ட வேளை வெந்தை வல்சி யாகப்

பரற்பெய் பள்ளிப் பாயின்று வதியு

முயவற் பெண்டிரே மல்லே மாதோ

பெருங்கோட்டுப் பண்ணிய கருங்கோட் டீம

நுமக்கரி தாகுக தில்ல வெமக்கெம்

பெருந்தோட் கணவன் மாய்ந்தென வரும்பற வள்ளித ழவிழ்ந்த தாமரை

நள்ளிரும் பொய்கையுந் தீயுமோ ரற்றே”

பால்முல்லை:

299

மையுண்ட கண்ணையும் அணிகலன்களையும் உடை டய தலைவியை இயற்கைப் புணர்ச்சியின் கண் புணர்ந்த தலைவன், வருத்தம் நீங்கின நெஞ்சுடனே, தனக்குத் தலைவியைத் தந்த ஊழினை வாழ்த்தியது பால்முல்லை என்னும் துறையாம் (பால்- ஊழ்.)

(எ.டு)

“திங்கள் விளங்கும் திகழ்ந்திலங்கு பேரொளி அங்கண் விசும்பின் அகத்துறைக- செங்கண் குயிலனைய தேமொழிக் கூரெயிற்றுச் செவ்வாய்ப் பயில்வளையை நல்கிய பால்.

பிரிவிடை அரற்றல்:

இளம் பிறையைப் போன்ற நெற்றியை யுடைய தலைவி தனது முன்கையிற் செறித்த வளையல் கழல, வெறுத்து வருந்தி தலைவன் பிரிந்தவிடத்து ஆற்றியிருந்தது பிரிவிடை அரற்றல் என்னும் துறையாம்.