உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

300

(எ.டு)

66

இளங்குமரனார் தமிழ்வளம்

4

ஓடுக கோல்வளையும் ஊரும் அலரறைக

தோடவிழ் தாழை துறைகமழக்-கோடுடையும் பூங்கானற் சேர்ப்பன் புலம்புகொள் மால்மாலை நீங்கானென் நெஞ்சகத்துள் நின்று.

பிழைத் தோர்த் தாங்குங்காவல்:

தன்னிடத்துப் பிழை செய்தோரைப் பொறுத்தருளும்

பாதுகாவலாம்.

(எ.டு)

“அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தற் றலை

பிள்ளைத் தெளிவு:

99

கரந்தை மறவன் போரின்கண் தான்பட்ட விழுப்புண்ணை விரும்பித் துடி முழக்கத்தோடே போர்க்களத்தின்கண் கூத்தாடியது பிள்ளைத் தெளிவு என்னும் துறையாம்.

(எ.டு)

"மேவார் உயிருணங்க மேன்முடித்த பிள்ளையன் பூவா ளுறைகழியாப் போர்க்களத்துள்-ஓவான் துடியிரட்டி விட்ட தொடுகழலார் முன்னின்று அடியிரட்டித் திட்டாடும் ஆட்டு.”

பிள்ளைப் பெயர்ச்சி:

தீ நிமித்தம் உண்டாகவும் அதனைப் பொருட்படுத்தாது வெட்சி மறவரோடு போர்செய்து வென்று ஆனிரை மீட்டு வந்த மறவனுக்கு வேந்தன் தண்ணளி செய்தது பிள்ளைப் பெயர்ச்சி என்னும் துறையாம்.

(6.6)

"பிணங்கமருட் பிள்ளை பெயர்ப்பப் பெயராது

அணங்கர்செய் தாளெறிதல் நோக்கி - வணங்காச்

சிலையளித்த தோளான் சினவிடலைக் கன்றே

தலையளித்தான் தண்ணடையுந் தந்து.