உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிள்ளையாட்டு: (அ)

புறப்பொருள்

301

கரந்தை மறவன் பகைவருடைய குடரைத் தன் வேலிற் சூட்டி அவ்வேலை அடி அடி நுனியாகத் திருப்பித் திருப்பிப் போர்க்களத்தின் கண்ணே நின்று ஆடியது பிள்ளையாட்டு என்னும் துறையாம்.

(எ.டு)

“மாட்டிய பிள்ளை மறவர் நிறந்திறந்து கூட்டிய எஃகங் குடர்மாலை-சூட்டியபின் மாறிரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட வேறிரிய விம்மும் துடி.

பிள்ளையாட்டு: (ஆ)

பிள்ளையாட்டாவது, வாட்போரால் பகைவரை வென்று மேம்பட்ட அரசிளங்குமரனை, அந்நாட்டு மக்கள் கொண்டு வந்து பாராட்டி அவனுக்குப் பறை முதலிய ஒலிக் கருவிகள் முழங்கத் துறக்க மாகிய அரசைக் கொடுத்துக் கொண்டாடிய ஆட்டமாகும்.

(எ.டு)

66

'வன்கண் மறமன்னன் வாண்மலைந்து மேம்பட்ட புன்றலை யொள்வாட் புதல்வற்கண்-டன்புற்றுக் கான்கெழுநாடு கொடுத்தார் கருதார்க்கு வான் கெழு நாடு வர'

பிள்ளை வழக்கு:

99

நிமித்தம் தப்பாதவாறு கூறிய புலவர்கட்குப் பசுக்கூட்டங் களை அதிகமாக வழங்கியது பிள்ளை

துறையாம். (பிள்ளை-நன்னிமித்தம்)

(எ.டு)

"புல்லார் நிரைகருதி யாஞ்செல்லப் புள்நலம் பல்லார் அறியப் பகர்ந்தார்க்குச்- சொல்லாற் கடஞ்சுட்ட வேண்டா கடுஞ்சுரையா னான்கு குடஞ்சுட் டினத்தாற் கொடு."

வழக்கு என்னுந்