உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/317

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

302

இளங்குமரனார் தமிழ்வளம்

4

பிறர்மனைதுயின்றமை விறலி கூறல்:

பரத்தையர் சேரியிடத்தே தலைவன்தங்கின நிலையை இத்தன்மைத் தென விறலி தலைவிக்கு எடுத்துக் கூறியது பிறர் மனை துயின்றமை விறலி கூறல் என்னும் துறையாம்.

(எ.டு)

"தண்தார் அணியவாம் தையலார் சேரியுள்

வண்டார் வயலூரன் வைகினமை- உண்டால் அறியேன் அடிஉறை ஆயிழையால் பெற்றேன் சிறியேன் பெரிய சிறப்பு.”

பின்தேர்க்குரவை: (அ)

தேரோரை வென்ற கோமகற்கே பொருந்திய இலக்கணத் தானே தேரின்பின்னே கூழுண்ட கொற்றவை கூளிச் சுற்றம்

ஆடுங்குரவையாம்.

(எ.டு)

“வென்று களங்கொண்ட வேந்தன்றேர் சென்றதற்பின் கொன்ற பிணநிணக்கூழ் கொற்றவை-நின்றளிப்ப வுண்டாடும் பேய்கண் டுவந்தனவே போர்ப் பரிசில் கொண்டா டினகுரவைக் கூத்து

பின் தேர்க்குரவை: (ஆ)

தும்பை மன்னனின் தேரின் பின்னர் வீரக்கழலணிந்த போர் மறவரோடு வளையலை யணிந்த பாண்மகளிர் ஆடியது பின்தேர்க்குரவை என்னும் துறையாம்.

(எ.டு)

“கிளையாய்ந்து பண்ணிய கேள்வியாழ்ப்பாணும் வளையா வயவரும் பின்னாக்-கொளையாய்ந்து அசைவிளங்கும் பாடலொ டாட வருமே திசை விளங்கும் தானையான் தேர்.”

பின்னிலை முயறல்:

தலைவி தான்முன்பு இழந்த அழகினைப் பெற விரும்பித் தலைவன் பின் இரந்து நிற்றலை மேற் கொண்டது பின்னிலை முயறல் என்னும் துறையாம்.