உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/318

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

புறப்பொருள்

"மற்கொண்ட திண்தோள் மறவேல் நெடுந்தகை தற்கண்டு மாமைத் தகையிழந்த-எற்காணப் பெய்களி யானைப் பிணரெருத்திற் கண்டுயான் கைதொழுதேன் தான்கண் டிலன்.'

புகழ்ந்தனர் பரவல்:

303

நிலவுலகத்தின்கண் யாம் இன்னதொரு பேற்றைப் பெறு வோமாக என்று சொல்லித் தெய்வத்தை முன்னிலைப் படுத்தி வாழ்த்துதல் புகழ்ந்தனர் பரவல் என்னும் துறையாம்.

(எ.டு)

66

‘சூடிய வான்பிறையோய் சூழ்கடலை நீற்றரங்கத்து

ஆடி அசையா அடியிரண்டும் -பாடி

உரவுநீர் ஞாலத் துயப்போக என்று

பரவுதும் பல்காற் பணிந்து.

புகழ்ச்சினர் பணிதல்:

விளங்கிய புகழினையுடைய

இறைவனை

இவ்வுலக

இன்பங்களைப் பெறக் கருதி வாழ்த்தியது புகழ்ச்சினர் பணிதல் என்னும் துறையாம்.

(எ.டு)

66

'ஆடல் அமர்ந்தான் அடியடைந்தார் என்பெறார்

ஓடரி உண்கண் உமையொருபாற் -கூடிய

சீர்சால் அகலத்தைச் செங்கண் அழல்நாகம் தாராய்த் தழுவப் பெறும்.

புணரா இரக்கம்:

وو

தலைவி தலைவனது தன்மையினை உணராமையானே தோன்றிய துன்பம் மேன்மேலும் பெருக. அத்தலைவியைப் புணராமையானே உண்டான துன்பத் தோடே தனிமையாகத் தங்கியது புணரா இரக்கம் என்னும் துறையாம்.

(எ.டு)

"இணரார் நறுங்கோதை எல்வளையாள் கூட்டம்

புணராமற் பூசல் தரவும்- உணராது