உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

305

புலவியுட் புலம்பல்:

அழகிய தொடியினையுடைய தலைவனது மாலையை அறிந்து ஊடல் கொண்டு தனிமையுற்றது புலவியுட் புலம்பல் என்னும் துறையாம்.

(எ.டு)

“ஓங்கிய வேலான் பணியவும் ஒள்ளிழை தாங்காள் வரைமார்பன் தார்பரிந்-தாங்கே அரும்படர் மூழ்கி அமைமென்தோள் வாட நெடும்பெருங்கண் நீந்தின நீர்."

புலவி பொருளாகத் தோன்றிய பாடாண்பாட்டு:

வில்போன்ற நெற்றியினையுடையாள் ஒருத்தி தலைவன் மார்பினை யாம் தழுவேம் என்று ஊடிச் சொல்லியது புலவி பொருளாகத் தோன்றிய பாடாண் பாட்டு என்னும் துறையாம்.

(எ.டு)

"மலைபடு சாந்தம் மலர்மார்ப! யாம்நின்

பலர்படி செல்வம் படியேம்- புலர்விடியல் வண்டினங்கூட் டுண்ணும் வயல்சூழ் திருநகரிற் கண்டனங் காண்டற் கினிது.”

புலனறி சிறப்பு:

பகைவர் நாட்டின்கண் சென்று ஆண்டுள்ள மறைச் செய்தி களை அறிந்து கூறிய ஒற்றர்களுக்கு, மறவர்களைக் காட்டிலும் மிகுதியான ஆக்களைக் கொடுத்தது புலனறி சிறப்பு என்னுந் துறையாம்.

(எ.டு)

“இறுமுறை எண்ணா திரவும் பகலும்

செறுமுனையுட் சென்றறிந்து வந்தார்-பெறுமுறையின்

அட்டுக் கனலும் அயில்வேலோய் ஒன்றிரண்டு

இட்டுக் கொடுத்தல் இயல்பு.'

புறத்திறை: (அ)

وو

உழிஞைப் படை பகைவனின் அரண் புறத்தே சென்று தங்கியது புறத்திறை என்னும் துறையாம்.