உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

306

(எ.டு)

இளங்குமரனார் தமிழ்வளம்

4

“புல்லார் புகலொடு போக்கொழியப் பொங்கினனாய்ப் பல்லார் மருளப் படைபரப்பி-ஒல்லார்

நிறத்திறுத்த வாட்டானை நேரார் மதிலின் புறத்திறுத்தான் பூங்கழலி னான்.

புறத்திறை; (ஆ)

பகைவரது காவற் காட்டினது சிறிய வழிகளாலும் பெரிய வாயில்களானும் உள்ளே யிருப்போர் புறம் போகாத படி வளைத்துக் கொண்டு வெட்சியார் அக்காவற்காட்டின் புறத்தே தங்கியது புறத்திறை என்னும் துறையாம்.

(எ.டு)

“உய்ந்தொழிவார் ஈங்கில்லை ஊழிக்கண் தீயேபோல் முந்தமருள் ஏற்றார் முரண்முருங்கத் - தந்தமரின் ஒற்றினான் ஆய்ந்தாய்ந் துரவோர் குறும்பினைச் சுற்றிறனார் போகாமற் சூழ்ந்து.”

புறத்துழிஞை:

உழிஞையார் நொச்சியாரது காவற்காட்டைக் கடந்து உட்சென்று அகழிக்கரையிலே தங்கியது புறத்துழிஞை என்னும் துறையாம்.

(எ.டு)

“கோள்வாய் முதலைய குண்டகழி நீராக

வாள்வாய் மறவேந்தன் வந்திறுத்தான்- நீள்வாயில்

ஓங்கல் அரணத் தொளிவளையார் வெய்துயிர்ப்ப

ஆங்கொல் அரிய அமர்.”

புறத்தோன் வீழ்ந்தபுதுமை;

அகத்தோனால் காத்து நின்ற இடை மதிலைப் பின்னர், அம்மதிலின் புறத்திருந்தோன் விரும்பிக் கைக் கொள்வது புறத் தோன் வீழ்ந்த புதுமையாம்.