உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/336

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

கண்ணார் சிலையார் கவர்ந்தார் கழல்வேந்தன் நண்ணார் கிளையலற நாடு.'

மறக்களவழி:

முழவு போன்ற தோளினையுடைய

மன்னனை

321

உழு

தொழிலையுடைய வேளாளனாக உருவகித்தது மறக்கள வழி

என்னும் துறையாம்.

(எ.டு)

66

“அஞ்சுவரு தானை அமர்என்னும் நீள்வயலுள்

வெஞ்சினம் வித்திப் புகழ்விளைக்கும்- செஞ்சுடர்வேற்

பைங்கட் பணைத்தாட் பகட்டுழவன் நல்கான்

எங்கட் கடையா இடர்."

மறக்காஞ்சி: (அ)

வஞ்சியார் அஞ்சும்படி காஞ்சி வேந்தன் போரைச் செலுத்தியது மறக்காஞ்சி என்னும் துறையாம்.

(எ.டு)

66

கருந்தலையும் வெண்ணிணமுஞ் செந்தடியு மீராப்

பருந்தோ டெருவை படர- அருந்திறல்

வேறாய மன்னர் வியப்பக் கடாயினான்

மாறா மறவன் மறம்."

மறக் காஞ்சி: (ஆ)

காஞ்சி மறவன் பகைவர் உயர்ச்சியைப் பொறானாய்த் தன் விழுப்புண்ணைப் பிளந்து உயிர் நீத்தலும் மறக்காஞ்சி என்னும் துறையாம்.

(எ.டு)

66

‘நகையம ராய நடுங்க நடுங்கான்

தொகையம ரோட்டிய துப்பிற்- பகைவர்முன் நுங்கிச் சினவுதல் நோனான் நுதிவேலாற் பொங்கிப் பரிந்திட்டான் புண்

மறக்காஞ்சி: (இ)

99

நல்ல குணம் உறுவிலையாகப் பெறுகின்ற பகுதியாராய்ந்து பெறுதற்குப் பட்ட விழுப் புண் தீர்ந்து வாழும் வாழ்க்கை நிலை