உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/335

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

320

(61.6)

இளங்குமரனார் தமிழ்வளம்

4

'மழுவாளான் மன்னர் மருகறுத்து மால்போற்

பொழிலேழுங் கைக் கொண்ட போழ்தி- னெழிமுடி சூடாச்சீர்க் கொற்றவனுஞ் சூடினான் கோடியர்க்கே கூடார்நா டெல்லாங் கொடுத்து

மண்ணு மங்கலம்: (ஈ)

எண்ணுதற்கரிய பெரும் புகழினையுடைய மன்னவன் திரு முழுக்குக் கொள்ளும் சிறப்பைக் கூறியது மண்ணுமங்கலம் என்னும் துறையாம்.

(எ.டு)

“கொங்கலர் கோதைக் குமரி மடநல்லாள்

மங்கலம் கூற மலிபெய்திக்- கங்கையாள் பூம்புனல் ஆகம் கெழீஇயினான் போரடுதோள் வேம்பார் தெரியலெம் வேந்து.”

மண்ணுமங்கலம்: (உ)

உ ஞை மன்னன் நொச்சியாரது மதிலைக் கைக் கொண்டு மங்கல நீராடியது மண்ணுமங்கலம் என்னும் துறையாம். (எ.டு)

“எங்கண் மலர எயிற்குமரி கூடிய

மங்கல நாள்யாம் மகிழ்தூங்கக்- கொங்கலர்தார்ச்

செய்சுடர்ப்பூண் மன்னவன் சேவடிக்கீழ் வைகினவே மொய்சுடர்ப்பூண் மன்னர் முடி.

மழபுலவஞ்சி:

وو

வஞ்சிவேந்தன் தனக்குப் பகைவருடையதாகிய நாட்டைக் கொள்ளையிட்டு இல்லங்கள் பாழ்படும் படி ஆண்டுள்ள பொருள்களைக் கைப்பற்றிய செயலைக்கூறியது மழபுலவஞ்சி என்னும் துறையாம்.

(61.6)

'களமர் கதிர்மணி காலேகம் செம்பொன் வளமனை பாழாக வாரிக்- கொளன்மலிந்து