உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணமங்கலம்:

புறப்பொருள்

319

பகையை வெல்லும் தோளினையும் எறியும் வேலினையும் உடைய மன்னன் பெண்டிரோடு புணர்ந்த நன்மையைச் சொல்லியது மணமங்கலம் என்னும் துறையாம்.

(எ.டு)

“அணக்கருந் தானையான் அல்லியந்தார் தோய்ந்தாள் மணக்கோல மங்கலம் யாம்பாட- வணக்கருஞ்சீர் ஆரெயில் மன்னன் மடமகள் அம்பணைத் தோட் கூரெயிற்றுச் செவ்வாய்க் கொடி.'

மண்ணு மங்கலம்: (அ)

பகையரசனின் மதிலையழித்துக் கழுதையேரான் உழுது வெள்ளை வரகுங் கொள்ளும் விதைத்து மங்கல மல்லாதன செய்தவன் மங்கலமாக நீராடுவதைக் குறிப்பது மண்ணுமங்கல மாகும்.

(எ.டு)

“நடுந்தேர் குழித்த ஞெள்ள லாங்கண்

வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப் பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்”

மண்ணு மங்கலம்: (ஆ)

மண்ணு மங்கலமாவது, அரசர்க்குச் சிறப்பெய்திய மிக்க புகழை எய்துவிக்கும் முடி புனைந்து ஆடும் நீராட்டாகும். (எ.டு)

“அளிமுடியாக் கண்குடையா னாகுதிநாள் வேய்ந்த வொளிமுடி பொன்மலையே யொக்கு- மொளிமுடிமேன் மந்திரத்தா லந்தணர் வாக்கியநீ ரம்மலைமே ம லந்தரத்துக் கங்கை யனைத்து

மண்ணுமங்கலம்: (இ

போரிட்ட மதிலிடத்து, ஒருவனை ஒருவன் கொன்று, அவன் முடிக்கலம் முதலியன கொண்டு, இறந்து பட்டவன் பெயராலேயே முடிமுனைந்து நீராடுவது மண்ணுமங்கலமாகும்.