உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

318

(6.6)

இளங்குமரனார் தமிழ்வளம்

4

66

ஒள்வாள் மறவர் உருத்தெழுந் தும்பர்நாள்

கள்வார் நறுங்கோதை காரணமாக்- கொள்வான் மருங்கெண்ணி வந்தார் மழகளிற்றின் கோடிக் கருங்கண்ணி வெண்கட்டிற் கால்.

மங்கல நிலை: (அ)

துயில் நீத்தெழும் மன்னர்முன் மங்கலம் கூறிய மிகுதியைச் சொல்லியது மங்கலநிலை என்னும் துறையாம்.

(எ.டு)

66

விண்வேண்டின் வேறாதல் மங்கலம் வேந்தர்க்கு

மண்வேண்டின் கைகூப்பல் மங்கலம்- பெண்வேண்டின் துன்னன் மடவார்க்கு மங்கலம் தோலாப்போர்

மன்னன் வரைபுரையும் மார்பு.'

மங்கல நிலை: (ஆ)

99

நிலைபெறும் சிறப்பினையுடைய ஆக்கத்தை ஒரு மன்னன் எய்தினான் என்று கூறுதலும் மங்கல நிலை என்னும் துறையாம். (எ.டு)

66

தீண்டியும் கண்டும் பயிற்றியும் தன்செவியால்

வேண்டியும் கங்குல் விடியலும்- ஈண்டிய

மங்கல ஆய நுகர்ந்தான் மறமன்னர் வெங்களத்து வேலுயர்த்த வேந்து.”

மடலூர்தல்:

தலைவன் தலைவியைப் பெற இடையூறு மிக்குழி ஊர் அம்பலத்தின் நடுவே பித்தர் போலப் பலவற்றைக் கூறி மடல் மாவைச் செலுத்தியது மடலூர்தல் என்னும் துறையாம்.

(எ.டு)

“இன்றிப் படரோ டியானுழப்ப ஐங்கணையான் வென்றிப் பதாகை எடுத்தானாம்- மன்றில் தனி மடமான் நோக்கி தகைநலம்பா ராட்டிக்

குனிமடல்மாப் பண்ணிமேற் கொண்டு.