உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/332

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

போர்மலைதல்:

புறப்பொருள்

317

கரந்தையார், ஆனிரையைக் கைப் பற்றிச் சென்ற வெட்சி மறவரை எய்தி அவர் மேலும் செல்லாதவாறு வளைத்துக் கொண்டு போர் செய்தது போர் மலைதல் என்னும் துறையாம்.

(எ.டு)

“புலிக்கணமும் சீயமும் போர்க்களிறும் போல்வார்

வலிச்சினமு மானமுந் தேசும்- ஒலிக்கும்

அருமுனை வெஞ்சுரத் தான்பூசற் கோடிச்

செருமலைந்தார் சீற்றஞ் சிறந்து.”

மகட் பாற்காஞ்சி:

ஒருவன் தன் மகளை விரும்பும் அரசனோடு மாறுபடுவது மகட் பாற் காஞ்சியாம்.

(எ.டு)

66

'அளிய கழல்வேந்தர் அம்மா அரிவை

எளியளென்று எள்ளி உரைப்பிற்- குரியாவோ

பண்போற் கிளவியிப் பல்வளையாள் வாள்முகத்த கண்போற் பகழி கடிது”

மகட்பால் இகல்:

நொச்சியரசன் மகளைத் திருமணம் செய்து கொள்ள

விரும்பிய உழிஞை மன்னனது மன்னனது

நிலைமையைக்

மகட்பால் இகல் என்னும் துறையாம்.

கூறியது

(எ.டு)

“அந்தழை அல்குலும் ஆடமை மென்தோளும் பைந்தளிர் மேனியும் பாராட்டித்- தந்தை புறமதில் வைகும் புலம்பே தருமே

மறமதில் மன்னன் மகள்.

மகள் மறுத்து மொழிதல்:

وو

உழிஞையரசன் நொச்சியானது மகளைத் தனக்கு மணம் செய்து தரும்படி வேண்ட நொச்சி மன்னன் மறுத்துக் கூறியது மகள் மறுத்து மொழிதல் என்னும் துறையாம்.