உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

316

போந்தை:

இளங்குமரனார் தமிழ்வளம்

4

முடியுடைத் தமிழ் வேந்தர் மூவருள் சேரன் சூடும் பூமாலையினைப் புகழ்ந்தது போந்தை என்னும் துறையாம். (போந்தை= பனந்தோடு: இது சேர மன்னர்களுக்கு அடையாளப் பூவாகும்.)

(எ.டு)

66

குடையலர் காந்தள்தன் கொல்லிச் சுனைவாய்த் தொடையவிழ் தண்குவளை சூடான்; புடைதிகழும் தேரதிரப் பொங்கும் திருந்து வேல் வானவன்

போர்எதிரிற் போந்தையாம் பூ.

போர்க்களத் தொழிதல்:

وو

பகைவர் படைக்கலன்களுக்குப்புறங்கொடாத வெட்சி மறவரை, எதிர்த்து இறுதி காறும் போர்செய்து அக்களத்திலேயே மாண்டது போர்க்களத்தொழிதல் என்னுந் துறையாம்.

(எ.டு)

“உரைப்பின் அதுவியப்போ ஒன்னார்கைக் கொண்ட

நிரைப்பின் நெடுந்தகை சென்றான்- புரைப்பின்று உளப்பட்ட வாயெல்லாம் ஒள்வாள் கவரக் களப்பட்டான் தோன்றான் கரந்து.”

போர்நிலைவகை:

கூதிர்ப்பாசறை வேனிற்பாசறை என்னும் இரண்டிடத்தும், போர் மீது கொண்ட வேட்கையால், காதலால் திரிபில்லாத மனத்தனாகி ஆண்டு நிகழ்த்தும் போர்த்தொழிலே போர் நிலை

வகையாம்.

(எ.டு)

“மூதில்வாய்த் தங்கிய முல்லைசால் கற்புடைய மாதர்பாற் பெற்ற வலியளவோ- கூதிரின் வெங்கண் விறல்வேந்தன் பாசறையுள் வேனிலா னைங்கணை தோற்ற வழிவு”