உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/330

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

இருளொடு வைகா திடம்படு ஞாலத்து

அருளொடு வைகி அகல்.”

பொருளொடு புகறல்:

315

உலகின் கண் பொய்ப் பொருளின் பற்றினை நீக்கி மெய்ம்மை யாகிய இறைப் பொருளை விரும்பியது பொருளொடு புகறல் என்னுந் துறையாம்.

(எ.டு)

66

'ஆமினி மூப்பும் அகன்ற திளமையும்

தாமினி நோயும் தலைவரும்-யாமினி மெய்யைந்து மீதூர வைகாது மேல்வந்த ஐயைந்தும் ஆய்வ தறிவு.”

பொலிவுமங்கலம்:

மன்னன் மனம் உவக்குமாறு

அவனுக்கு

மகன்

பிறத்தலானே பலரும் கொண்டாடியது பொலிவு மங்கலம்

என்னும் துறையாம்.

(எ.டு)

“கருங்கழல் வெண்குடைக் காவலற்குச் செவ்வாய்ப்

பெருங்கண் புதல்வன் பிறப்பப்- பெரும்பெயர் விண்ணார் மகிழ்ந்தார் வியலிடத்தார் ஏத்தினார் எண்ணார் அவிந்தார் இகல்.”

பொழுது கண்டு இரங்கல்:

உயிர் நிற்றலைப் பொருளாய் நெட்டுயிர்ப் பெறிந்து

சுழலும் பொன்வளையலையுடைய ய பொழுதினைக்கண்டு வருந்தியது.

(எ.டு)

"இறையே இறந்தன எல்வளை உண்கண் உறையே பொழிதலும் ஓவா - நிறையைப் பருகாப் பகல்கரந்த பையுள்கூர் மாலை உருகா உயங்கும் உயிர்.”

தலைவி மாலைப்