உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/329

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

பையுள்:

இளங்குமரனார் தமிழ்வளம்

4

பையுளாவது, வீரன் இறந்ததற்காக அவனுடைய சுற்றத்தார் அழுதலே யன்றி அவர்தம் மனைவியர் தாமே தத்தம் கணவரைக் கட்டிக் கொண்டு அழுததைக் கண்டோர் அடையும் வருத்தமாம்.

(எ.டு)

“கதிர் மூக் காரல் கீழ்ச் சேற் றொளிப்ப" என்னும் புறப்பாடல்

பொருநவாகை:

அறிஞர் ஒரு மன்னனுக்கு ஒப்பின்மை தோன்றும்படி நின்னோடு பிறரை ஒப்பு நோக்கி அவரது ஒவ்வாமை காரணமாக யாரையும் இகழ்வதைத் தவிர்க என அறிவுறுத்துவது பொருந வாகை என்னுந் துறையாம்.

(6.6)

“வெள்ளம் போல்தானை வியந்து விரவாரை எள்ளி உணர்தல் இயல்பன்று- தெள்ளியார் ஆறுமேல் ஆறியபின் அன்றித்தம் கைக்கொள்ளார் நீறுமேற் பூத்த நெருப்பு.

பொருநர் ஆற்றுப்படை:

பொருநன் ஒருவன் மற்றொரு பொருநனை இன்ன வள்ள லிடத்துச் செல்க என ஆற்றுப் படுத்தது பொருநராற்றுப் படை என்னுந் துறையாம்.

(எ.டு)

“தெருவில் அலமரும் தெண்கண் தடாரிப்

பொருவில் பொருந! நீ செல்லின்- செருவில்

அடுந்தடக்கை நோன்றாள் அமர்வெய்யோன் ஈயும்

நெடுந்தடக்கை யானை நிரை.

பொருள் மொழிக்காஞ்சி:

மெய்யுணர்ந்தோர் கண்ட பொருள் இதுவென அதன்

இயல் புணர்த்தியது பொருள் மொழிக்காஞ்சி என்னும் துறையாம்.

(எ.டு)

66

ஆய பெருமை அவிர்சடையோர் ஆய்ந்துணர்ந்த

பாய நெறிமேற் படர்ந்தொடுங்கித்- தீய