உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/338

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறப்பொருள்

323

மன்னைக் காஞ்சி:

ஒருவன் இறந்தவிடத்து அவன் இத்தன்மையோன் என்று னையோர் இரங்கிக் கூறும் பொருட்கண் வருவது மன்னைக் காஞ்சியாம்.

(எ.டு)

“சிறியகட் பெறினே யெமக்கீயு மன்னே பெரியகட் பெறினே

யாம்பாடத் தான்மகிழ்ந் துண்ணு மன்னே சிறுசோற் றானு நனிபல கலத்தன் மன்னே

பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே யென்பொடு தடிபடு வழியெல்லா மெமக் கீயு மன்னே யம் பொடு வேனுழை வழியெல்லாந் தானிற்கு மன்னே

(புறம்-235)

மாணார்ச் சுட்டிய வாண்மங்கலம்:

பகைவரைக் குறித்த வாள் வென்றியாற் பசிப் பிணி நீங்கிய பேய்ச் சுற்றமும் பிறரும் வாளினை வாழ்த்துவது வாண்மங்கல மாகும்.

(எ.டு)

66

"ஆளி மதுகை யடல்வெய்யோன் வாள்பாடிக்

கூளிகள் வம்மினோ கூத்தாடக்- காளிக்குத்

தீரா வெம்பசி தீர்த்துநாஞ் செங்குருதி

நீராட்டி யுண்ட நிணம்

மாராயவஞ்சி:

வஞ்சிவேந்தனால் சிறப்புப் பெற்ற மறவர்களின் மாண் பினைக் கூறியது மாராயவஞ்சி என்னுந்துறையாம்.

(6.6)

“நேராரம் பூண்ட நெடுந்தகை நேர்கழலான்

சேரார் முனைநோக்கிக் கண்சிவப்ப- போரார்

நறவேய் கமழ்தெரியல் நண்ணார் எறிந்த

மறவேல் இலைமுகந்த மார்பு