உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/339

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

324

மாலைநிலை:

இளங்குமரனார் தமிழ்வளம்

4

இறந்துபட்ட தன் கணவனுடனே நெருப்பிலே புகவேண்டித் தலைவி மாலைப் பொழுதிலே நின்றது மாலைநிலை என்னும் துறையாம்.

(எ.டு)

"சோலை மயிலன்னாள் தன்கணவன் சொல்லிய சொல் மாலை நினையா மனங்கடைஇக்- காலைப்

புகையழல் வேலோன் புணர்ப்பாகி நின்றாள் அகையழல் ஈமத் தகத்து.

முதுஉழிஞை: (அ)

மதிலகத்துள்ள

நொச்சி மறவருடைய

மாண்பினை

உழிஞை ஒற்றர் கூறுதல் முது உழிஞை என்னும் துறையாம்.

(எ.டு)

66

"அறியார் வயவர் அகத்திழிந்த பின்னும்

நெறியார் நெடுமதிலுள் நேரார்- மறியாம்

கிளியொடு நேராங் கிளவியார் வாட்கண் களியுறு காமங் கலந்து.’

முது உழிஞை: (ஆ)

உழிஞை மறவர் நொச்சியாரது அரணகத்தே பாய்கின்ற பறவையைப் போன்று யாண்டும் குதித்தது முது உழிஞை என்னும் துறையாம்.

(எ.டு)

"கோடுயர் வெற்பின் நிலங்கண் டிரைகருதும்

தோடுகொள் புள்ளின் தொகையொப்பக்- கூடார்

முரணகத்துப் பாற முழவுத்தோள் மள்ளர்

அரணகத்துப் பாய்ந்திழிந்தார் ஆர்த்து.

முது காஞ்சி:

எல்லாப் பொருள்கட்கும் மேலாய் வரும் மெய்ப் பொருளைத் தக்கவிடத்து உணர்த்தி மற்றைய பொருள்களின் நிலையாமையையும் முறைப்படக் கூறியது முதுகாஞ்சி என்னும் துறையாம்.