உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/340

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

66

புறப்பொருள்

"இளமை நிலைதளர மூப்போ டிறைஞ்சி

உளமை உணரா தொடுங்கி- வளமை

வியப்போவல் இல்லா வியலிடத்து வெஃகாது உயப்போகல் எண்ணின் உறும்.”

முதுபாலை:

325

கொடுமை மிக்க பாலைநில வழியில் தன் கணவனை இழந்து தனியளாய் நின்று தலைவி வருந்துவதைக் குறிப்பது முது பாலையாம்.

(எ.டு)

66

இளையரு முதியரும் வேறுபுலம் படர

வெடுப்ப வெழாஅய் மார்ப மண்புல்ல விடைச்சுரத் திறுத்த மள்ள விளர்த்த வளையல் வறுங்கை யோச்சிக் கிளையு ளின்ன னாயின னிளையோ னென்று நின்னுரை செல்லு மாயின் மற்று முன்னூர்ப் பழுனிய கோளியா லத்துப் புள்ளார் யாணர்த் தற்றே யென்மகன் வளனுஞ் செம்மலு மெமக்கென நாளு மானாது புகழு மன்னை

யாங்கா குவள்கொ லளிய டானே

முதுமொழிக் காஞ்சி:

(புறம் 254)

உலகம் புகழும் அறிவுடையோர், ஆராய்வார் உணர்தற் குரிய உலகின்கண் நிகழும் அறம், பொருள், இன்பம், என்னும் மூன்று உறுதிப் பொருளின் முடிந்த நிலைமையினை அறியும் படிக் கூறுவது முது மொழிக்காஞ்சி என்னும் துறையாம்.

(எ.டு)

“ஆற்றின் உணரின் அருளறமாம் ஆற்றார்க்குப் போற்றார் வழங்கிற் பொருள்பொருளாம்- மாற்றிப் புகலா தொழுகும் புரிவளையார் மென்தோள் அகலா தளித்தொழுகல் அன்பு.”