உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/341

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

முதுமொழிவஞ்சி:

இளங்குமரனார் தமிழ்வளம்

4

ஒரு மறவனுடைய குடி முதல்வனைப் புகழ்ந்து கூறியது முதுமொழி வஞ்சி என்னுந் துறையாம்.

(6.6)

"குளிறு முரசங் குணில்பாயக் கூடார்

ஒளிறுவாள் வெள்ளம் உழக்கிக்- களிறெறிந்து

புண்ணொடு வந்தான் புதல்வற்குப் பூங்கழலோய் தண்ணடை நல்கல் தகும்’

முரச உழிஞை:

உழிஞை வேந்தனது முரசின் நிலையைக் கூறியது முரச

உழிஞை என்னும் துறையாம்.

(எ.டு)

66

கதிரோடை வெல்களிறு பாயக் கலங்கி

உதிரா மதிலும் உளகொல்- அதிருமால்

பூக்கண் மலிதார்ப் புகழ்வெய்யோன் கோயிலுள் மாக்கண் முரச மழை.

முரசவாகை:

அரசனது வெற்றிமுரசின் தன்மையைச் சொல்லியது முரச வாகை என்னும் துறையாம்.

(எ.டு)

“மதியேர் நெடுங்குடை மன்னர் பணிந்து

புதிய புகழ்மாலை வேய-நிதியம்

வழங்குந் தடக்கையான் வான்தோய் நகருள்

முழங்கும் அதிரும் முரசு."

முல்லை:

பெரிய மலைபோன்ற மார்பினையுடைய தலைவன் தன்னை விரும்பின காதலையும் மடப்பத்தையும் உடைய தன் தலைவியைப் புணர்ந்த மகிழ்ச்சியினது மிகுதியைக் கூறியது முல்லை என்னும் துறையாம்.