உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(எ.டு)

66

புறப்பொருள்

'ஊதை உளர ஒசிந்து மணங்கமழும்

கோதைபோல் முல்லைக் கொடி மருங்குற்- பேதை குவைஇ இணைந்த குவிமுலை ஆகம்

கவைஇக் கவலை இலம்.

முற்றுமுதிர்வு:

327

அடைத்திருந்த நொச்சி மன்னனது அரண்மனையின் கண் காலை முரசம் முழங்கக் கேட்ட உழிஞை மன்னனது சினத்தின் மிகுதியைக் கூறியது முற்று முதிர்பு என்னும் துறையாம்.

(எ.டு)

“காலை முரசம் மதிலியம்பக் கண்கனன்று

வேலை விறல்வெய்யோன் நோக்குதலும்- மாலை அடுகம் அடிசிலென் றம்மதிலுள் இட்டார் தொடுகழலார் மூழை துடுப்பு.

முற்றுழிஞை:

கூத்தப் பெருமான் முப்புரத்தை எரிக்கும் பொருட்டுச் சூடிய உழிஞை மாலையைப் புகழ்ந்தது முற்றுழிஞை என்னும் துறையாம்.

(எ.டு)

“மயங்காத தார்ப்பெருமை மற்றறிவார் யாரே இயங்கரண மூன்றும் எரித்தான்- தயங்கிணர்ப் பூக்கொள் இதழிப் புரிசெஞ் சடையானும் மாக்கொள் உழிஞை மலைந்து.”

முன்தேர்க் குரவை: (அ)

வலிமையுடைய தும்பை மறவர்கள் கணைய மரத்தைப் போன்ற தோளையுடைய தம் மன்னன் தேர்முன் ஆடியது முன் தேர்க்குரவை என்னுந் துறையாம்.