உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேள்விநிலை:

புறப்பொருள்

347

முடிவில்லாத புகழையுடைய மன்னன் தேவர்களும் மனம் மகிழும்படி அறக்களவேள்வி

வேள்விநிலை என்னும் துறையாம்.

(எ.டு)

சய்த சிறப்புரைத்தது

“கேள்வி மறையோர் கிளைமகிழ்தல் என் வியப்பாம் வேள்வி விறல்வேந்தன் தான்வேட்ப- நீள்விசும்பின் ஈர்ந்தார் இமையோரும் எய்தி அழல்வாயால் ஆர்ந்தார் முறையால் அவி.

வெறியாட்டு:

மறக்குடி மகளிர் தம்முடைய கணவர் மேற்கொண்ட தொழில் நன்றாக முடியும் பொருட்டு, வேலனொடு வள்ளிக் கூத்தை ஆடியது வெறியாட்டு என்னும் துறையாம்.

(எ.டு)

“காணில் அரனுங் களிக்குங் கழன்மறவன்

பூணிலங்கு மென்முலைப் போதரிக்கண்- வாணுதல்

தான்முருகு மெய்ந்நிறீஇத் தாமம் புறந்திளைப்ப

வேன்முருகற் காடும் வெறி.

வேற்றுப்படை வரவு:

உழிஞை மன்னன் மதில் முற்றுகையை விட்டு நீங்குமாறு வேற்றரசன் நொச்சி மன்னனுக்குத் துணையாக வந்தது வேற்றுப் படை வரவு என்னும் துறையாம்.

(எ.டு)

“உவனின் றுறுதுயரம் உய்யாமை நோக்கி அவனென் றுலகேத்தும் ஆண்மை- இவனன்றி மற்றியார் செய்வார் மழைதுஞ்சு நீளரணம் முற்றியார் முற்று விட.

வேற்றொழில் வன்மை:

போர்க் கணன்றியும் பெரியோராகிய பகைவரை அத் தொழிற் சிறப்பான் அஞ்ச வைப்பதும் வேற்றொழில் வன்மை யாகும்.