உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பா:-

355

தரவு, தாழிசை, தனிச் சொல், சுரிதகம் என்னும் நான்கு உ றுப்புக்களோடு, தாழிசைக்கும் தனிச் சொல்லுக்கும் இடையில் அம்போதரங்கம் என்னும் உறுப்பினைக் கொண்டு அமைவது அம்போதரங்க ஒத்தாழிசைக் கலிப்பாவாகும். கரைசாரக் கரைசார ஒருகாலைக் கொருகாற் சுருங்கி வருகின்ற நீர்அலை போல நாற்சீர் அடியும் முச்சீர் அடியும், இருசீர் அடியும் ஆகிய அசை அடிகளைத் தாழிசைக்கும் தனிச் சொற்கும் நடுவே தொகுத்துத் தரவு தாழிசை அம்போதரங்கம் தனிச் சொல் சுரிதகம் என்னும் ஐந்துறுப்புகளையும் உடையது, அம்போ தரங்க ஒத்தாழிசைக் கலிப்பா எனப் பெயர் பெறுவதாயிற்று.

அம்போதரங்கம்:-

அராகத்தை அடுத்துவரும் கலிப்பாவின் உறுப்பாகும். தரங்கம் என்றால் அலை. கடல் அலை கரையைச் சேருங்கால் சுருங்குவதுபோல இவ்வுறுப்பும் முதலில் அளவடிகளாலும், பிறகு சிந்தடி குறளடிகளாலும் குறைந்து வரும். அதனால் இதற்கு அம்போதரங்கம் என்ற பெயர் ஏற்பட்டது. அம்போதரங்க அடிகளில் காய்ச்சீர்களும், இயற்சீர்களும் விரவி வரலாம். ஓரசையே சீராகிய அசைச்சீர்களும் வருவதுண்டு. இது பேரெண், அளவெண், இடையெண், சிற்றெண் என்ற நான்கு உறுப்புகளை உடையது. நாற்சீரடியாய் வருவன பேரெண் எனவும், நாற் சீரோடியாய் வருவன அளவெண் எனவும், முச்சீரோரடியாய் வருவன டையெண் எனவும், இருசீரோடியாய் வருவன சிற்றெண் எனவுங் கொள்ளப்படும். இவ்வுறுப்பிற்கு அசையடி, பிரிந்திசைக் குறள், சொற்சீரடி எண் என்ற வேறு பெயர்களும் உள்ளன.

6

தனிச் சொல்

கலிப்பாவின் முடிவைத் தெரிவிக்கும் உறுப்பு, பாடலில் உறுப்பு,பாடலில் கூறப்பட்டுள்ள பொருளோடு தொடர்புடையதாய், ஓரசை அல்லது சீர் தனித்து நிற்றலே இதன் இலக்கணமாகும். இதனை விட்டிசை, கூன், தனிநிலை, அடைநிலை என்றும் அழைப்பர்.

சுரிதகம்

கலிப்பாவை முடிக்கும் ஈற்று உறுப்பாகும். இவ்வுறுப்பு ஆசிரியப்பாவாலும் சிறுபான்மை

பெரும்பாலும்

வெண்பாவாலும் அமையும். இதனை அடக்கியல், வாரம்,

வைப்பு, போக்கியல் என்றும் அழைப்பர்.