உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

356

இளங்குமரனார் தமிழ்வளம்

4

கலிப்பாவின் உறுப்புகள்

தரவு, தாழிசை, அராகம், அம்போதரங்கம், தனிச் சொல், சுரிதகம் என்பன கலிப்பாவின் உறுப்புக்களாகும்.

தரவு

இது கலிப்பாவின் முதல் உறுப்பாகும். பாடலின் பொருளைத் தொடங்கித் தருவது இதன் பணியாகும். இது மூன்றடி முதல் பன்னிரண்டு அடிகள் வரைவரும். இதில் புளிமாங்காய், கரு விளங்காய்ச் சீர்களே மிகுதியாக வரும். சில கலிப்பாக்களில் இரண்டு தரவு வருதல் கூடும்.

தாழிசை

இது கலிப்பாவின் இரண்டாவது உறுப்பு. தாழ்ந்து ஒலிப்ப தால் தாழிசை என்று இதற்குப் பெயர் வரலாயிற்று. தரவு எடுத்துத் தந்த பொருளை வளர்க்குந்தன்மையுடையது. இது புளிமாங்காய், கருவிளங்காய்ச் சீர்களை மிகுதியாகப் பெற்று நடக்கும். தாழிசையின் அடிகள் தரவின் அடிகளைக் காட்டிலும் குறைவாக இருக்கவேண்டும். கலிப்பாவினுள் தாழிசை மூன்றேனும் ஆறேனும் வரலாம். இதற்கு இடைநிலைப்பாட்டு என்ற வேறு பெயரும் உண்டு.

அராகம்

ச்

கலிப்பாவின் மூன்றாவது உறுப்பாகும் இது. கலிப்பா இதைப் பெற்று நடக்கவேண்டும் என்ற இன்றியமையாமை இல்லை. பெறாமல் நடக்கும் கலிப்பாக்களும் உள்ளன. இது கருவிளச்சீர்களை அதிகமாகப் பெற்று நடக்கும். முடுகிச் செல்லும் நடையை உடையதால் இதற்கு முடுகியல் என்ற வேறு பெயரும் உண்டு. அராகம் அளவடியால் நடைபெறும். சிந்தடி, குறளடிகளில் வாரா. மற்ற அடிகளிலும் வரலாம். இது நான்கடி கள் முதல் எட்டடிகள் வரையில் வரலாம். இரண்டடிகளையுடைய நான்கு அராகங்கள் வருதலுமுண்டு.

அரங்கேற்றுங்காலம்

அகர ஆகாரமும், இகர ஈகார ஐகாரமும், உகர ஊகார ஔகாரமும், எகர ஏகாரமும், ஒகர ஓகாரமும் முறையே உதயாதி. அவ்வாறு நாழிகையுதிக்கும். இவற்றுள் முதல் மூன்று நாழிகையும் உத்தமம், பின்மூன்று நாழிகையுமாகாது; இவ்வைந்து கூற்