உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/372

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

357

றெழுத்துக்களை முதலிலுடைய பாக்களுக்குச் சொன்ன காலத்தில் முற்கூற்றில் அரங்கேற்றவேண்டும்.

அரசன் விருத்தம்:-

பத்துக் கலித்துறையும் முப்பது விருத்தமும் கலித்தாழிசையு மாக மலை, கடல், நாடு, வருணனையும், நிலவருணனையும், வாண் மங்கலமும் தோண் மங்கலமும் பாடி முடிப்பது.

அலங்கார பஞ்சகம்:-

வெண்பா, கலித்துறை, அகவல், ஆசிரிய விருத்தம், சந்த விருத்தம் இவ்வகையே மாறி மாறி நூறு செய்யுள் அந்தாதித்துப் பாடுவது.

அளவடி:-

நான்கு சீர்களைக் கொண்டது அளவடியாகும். இவ்வடியை நேரடிஎன்றுங் கூறுப.இவ்வடி வெண்பா ஆசிரியப்பா, கலிவிருத்தம் முதலிய பாக்களுக்கு உரியது. பத்து எழுத்து முதலாகப் பதினான்கு எழுத்தளவும் அளவடிக்கு அளவடிக்கு எல்லை என்பர் தொல்காப்பியர்.

எடு:-

“சொல்லருஞ் சூற்பசும் பாம்பின் தோற்றம்போல் மெல்லவே கருவிருந் தீன்று மேலலார்

செல்வமே போற்றலை நிறுவித் தேர்ந்தநூல் கல்விசேர் மாந்தரி னிறைஞ்சிக் காய்த்தவே”

அளபெடைத்தொடை:-

அடிதொறும் அளபெழுமாறு தொடுப்பின் அஃது அள பெடைத் தொடை எனப்படும். அது உயிரளபெடை ஒற்றள பெடை என இருவகைப்படும்.

எடு:

“மாஅ லஞ்செவிப் பணைத்தாண் மாநிரை

66

மாஅல் யானையொடு மறவர் மயங்கி - உயிரளபெடை.'

‘கஃஃ றென்னுங் கல்லதர்க் கானிடைச்

சுஃஃ றென்னுந் தண்டோட்டுப் பெண்ணை"-ஒற்றளபெடை.