உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/373

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

358

இளங்குமரனார் தமிழ்வளம்

4

ஆசிடை நேரிசை வெண்பா

வெண்பாவின் முதற்குறட் பாவினோடு தனிச் சொல் டைவேறுபட்டு விட்டிசைப்பின் ஒற்றுமைப் படாத தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களை பற்றாசிட்டு ஒற்றுமைப் படுத்தினாற்போல முதல்குறட்பாவின் இறுதிக் கண் ஒன்றும் இரண்டும் அசைசேர்த்து இரண்டு விகற்பத்தானும் ஒரு விகற்பத்தானும் வரும் வெண்பாக்கள் ஆசிடை நேரிசை வெண்பா எனப் பெயர் பெறும்.

எடு:-

66

ஆர்த்த வறிவின ராண்டிளைய ராயினுங்

காத்தோம்பித் தம்மை யடக்குப-மூத்தொறூஉம் தீத்தொழிலே கன்றித் தெரிதந் தெருவைபோல் போத்தறார் புல்லறிவி னார்.

ஆசிரியத்தளை

நிலைச்சீர் இயற்சீராக இருத்தல் வேண்டும். அந்த இயற்சீரீற்று மாமுன் நேரும், விளமுன் நிரையும் வருவது ஆசிரியத்தளை. இதை மாமுன் நேர் வருவதை நேரொன்றாசிரியத்தளை என்றும், விளமுன் நிரைவருவதை நிரையொன்றாசிரியத்தளை என்றுங் கூறுவர்.

எடு:-

“தேனார் கஞ்சச் செம்ம லாதி”

இதில் தேனார்+கஞ் என மாமுன் நேர் வருதலால் து நேரொன்றாசிரியத்தளை.

66

“வானோர் மாதர் மங்கலங் களத்திடை'

து

இதில் மங்கலங்+களத் என விளமுன் நிரை வருதலால் இது நிரையொன்றாசிரியத்தளையாம்.

ஆசிரியத்தளையின் வகை

சீரானது பொருந்துகிற இடத்தில், ஓசை ஒத்துவரு மானால் அது ஆசிரியத்தளையாகும். நிலைமொழியாகிய இயற்சீரினின்றும் வருமொழியாகிய சீரின் முதலசையும் நேராய் ஒன்றின் நேரொன்றிய ஆசிரியத்தளையாம். நிரையாய் ஒன்றின் நிரையொன்றிய ஆசிரியத்தளையாம்.