உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியத்தாழிசை:

யாப்பு

359

நான்குசீர்களையும், அதற்கு அதிகமான சீர்களையுங் கொண்ட அளவொத்த மூன்றடிகள் ஒரு பொருள்மேல் மூன்றாக அடுக்கியும், தனித்தும் வரும் செய்யுள் ஆசிரியத் தாழிசையாகும். ஒரு பொருள்மேல் மூன்று அடுக்கி வருவதே சிறப்புடைத்து. நான்கு சீர்களுக்கு அதிகமான சீர்களைப் பெற்றும், கலித்தளை வரப் பெற்றும் ஆசிரியத்தாழிசை வரலாம்.

எடு:-

“கன்று குணிலாக் கனியுகுத்த மாயவன் இன்று நம்மானுள் வருமே லவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ, பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் ஈங்குநம் மானுள் வருமே லவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழி, கொல்லியஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லிநம் மானுள் வருமே லவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழி."

இவை ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வந்த ஆசிரியத்

தாழிசை

66

'வானுற நிமிர்ந்தனை வையக மளந்தனை பான்மதி விடுத்தனை பல்லுயி ரோம்பினை நீனிற வண்ணநின் னிரைகழ றொழுதனம்.

து தனியேவந்த ஆசிரியத் தாழிசை. ஆசிரியத்துறை

நான்கடியாய் ஈற்றயல் அடி அளவில் குறைந்து வருவனவும், நான்கடியாய் ஈற்றயல் அடி அளவு குறைந்து இடைமடங்கி வருவனவும், நான்கடியாய் டை டயிடை அடிகள் கள் அளவு குறைந்தும் இடை மடங்கியும் வருவனவும் ஆசிரியத் துறையாம். இடை மடங்கி வருதல் என்பது செய்யுளின் இடையில் வந்த ஓரடியோ அவ்வடியின் ஒரு பகுதியோ மீண்டும் மடங்கி வருவது. ஓர் அடியில் எத்தனை சீர் வேண்டுமானாலும் வரலாம்.