உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

இளங்குமரனார் தமிழ்வளம்

4

ஆசிரிய நிலை விருத்தம்

பொருள் முற்றுப் பெறாத கழிநெடிலடிகள் நான்கு கொண்டது ஆசிரிய நிலை விருத்தம்.

எடு:-

“விடஞ்சூ ழரவி னிடைநுடங்க மின்வாள் வீசி விரையார்வேங் கடஞ்சூழ் நாடன் காளிங்கன் கதிர்வேல் பாடு மாதங்கி

வடஞ்சேர் கொங்கை மலைதாந்தாம் வடிக்கண் ணீலமலர் தாந்தாம் தடந்தோ ளிரண்டும் வேய்தாந்தா மென்னுந் தன்கைத் தண்ணுமையே.

ஆசிரியப்பாவின் அடியளவு

ஆசிரியப் பாடலின் உயர்ந்த அடிக்கு எல்லை ஆயிரம் அடிகளாகும். குறைந்தது மூன்றடிகளாகும். இடைப்பட்ட எல்லா அடிகளாலும் ஆசிரியப்பா வரப் பெறும். 'ஆசிரிய நடைத்தே வஞ்சி' என்பதனால் வஞ்சிப்பாவிற்கும் இந்த அடிவரையறை கொள்ளப்படும். (பின்னே இவ்வடி வரையறை மிகலாயிற்று). ஆசிரியப்பாவில், அடிபற்றிய முடிவுகள்

நேரிசை ஆசிரியப்பாவின் ஈற்றயல் அடி மூன்று சீராகவும் முடியும். இடையடி முச்சீரடியாக வருதலுமுண்டு.

(எ.டு:-

66

முதுக்குறைந் தனளே முதுக்குறைந் தனளே

மலையன் ஒள்வேற் கண்ணி

முலையும் வாரா முதுக்குறைந்தனளே'

இதனுள் ஈற்றயலடி முச்சீரான் வந்தது.

“நீரின் றண்மையுந் தீயின் வெம்மையுஞ்

சாராச் சார்ந்து தீரத் தீருஞ்

சார னாடன் கேண்மை

சாரச் சாரச் சார்ந்து

தீரத் தீரத் தீர்பொல் லாதே

என்ற பாவில் ‘சாரனாடன் கேண்மை' எனவும் ‘சாரச் சாரச் சார்ந்து' எனவும் முச்சீரடி இரண்டு வந்தன காண்க.

ஆசிரியப்பாவின் வகைகள்

ஈற்றயலடி முச்சீரான் வருவது நேரிசையாசிரியமாகும். டையிடை முச்சீர் வருவது ணைக்குறளாசிரியமாகும்.