உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

361

எல்லாவடியும் ஒத்துவருவது நிலைமண்டிலவாசிரியமாகும். எல்லாவடியும் ஒத்துவரும் பாட்டில், அதனுள் யாதானும் ஓரடியை முதலும் முடிவுமாக வைத்தாலும் ஓசையும் பொருளும் வழுவாது வருவது அடிமறி மண்டில வாசிரியமாகும். முச்சீரடி முதலாக அறுசீரடியீறாக மயங்கி வருவது அடிமயங்காசிரிய L மாகும். வெண்பாவடி மயங்கிய ஆசிரியம் வெள்ளடிமயங்கிய ஆசிரியமாகும். வஞ்சியடி மயங்கிய ஆசிரியம் வஞ்சியடி மயங்கிய வாசிரியமாகும்.

ஆசிரியப்பாவில் வஞ்சிச்சீர்

இனிய ஓசை அமைய வந்தால் வஞ்சியுரிச்சீரும் ஒரோ விடத்து ஆசிரிய அடிக்கண் வரும்.

எடு:-

“மாரியொடுமலர்ந்த மாத்தாட்கொன்றை குறிஞ்சியொடு கமழுங் குன்ற நாடன்.'

99

என மாசேர்சுரம் புலிசேர்சுரம் என்பன அடிமுதற்கண் வந்தன.

ஆசிரியப்பாவின் பொது இலக்கணம்

இயற்சீர் பயின்று அயற்சீர் விரவி நேரொன்றாசிரியத்தளை, நிரையொன்றாசிரியத்தளை ள ஆகிய ஆசிரியத்தளைகளைப் பெற்று. வேற்றுத் தளை மயங்கிவர, கருவிளங்கனி கூவிளங்கனி முதலிய நிரை நடுவாகிய வஞ்சியுரிச்சீர்களை நீக்கி, அளவடியோடு இடையிடையே சிந்தடி, குறளடிகளும் வர, ஏ, ஓ, என், ஈ, ஆ, ஆய், ஐ என்னும் அசைகளுள் அசைகளுள் ஒன்றினை இறுதியில் பெற்று அகவலோசை யுடைத்தாய் மூன்றடிகளைச் சிற்றெல்லையாகவும் ஆயிரம் வரையுள்ள அடிகளைப் பேரெல்லையாகவுங் கொண்டு நடைபெறும்.

ஆசிரியப்பாவில் வெண்சீர்

இனிய ஓசை பொருந்தி வருகுவதாயின், ஆசிரிய அடிக்கு வெண்பாவுரிச்சீரும் வரப்பெறும்.

எ.டு:-

66

இமிழ்கடல் வளைஇய வீண்டகன் கிடக்கைத் தமிழ்தலை மயங்கிய தலையாலங் கானத்து”