உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

362

இளங்குமரனார் தமிழ்வளம்

4

ஆசிரிய மண்டில விருத்தம்

அடிகள் ஒவ்வொன்றும் பொருள் முற்றி முடியும் ஆசிரிய விருத்தம் ஆசிரிய மண்டில விருத்தம் என்று பெயர் பெறும்.

எ.டு:-

“செங்கயலுங் கருவிளையுஞ் செவ்வேலும்

பொருகணையுஞ் செயிர்க்கு நாட்டம் பங்கயமு மிலவலரும் பனிமுருக்கம் பவளமுமே பதிக்குஞ் செவ்வாய் பொங்கரவி னிரும்படமும் புனைதேரும்

பொலிவழிக்கும் படைவீங் கல்குல் கொங்கிவருங் கருங்கூந்தற் கொடியிடையாள் வனமுலையுங் கூற்றங் கூற்றம்."

ஆசிரிய விருத்தம்

ஒத்த அளவையுடைய கழி நெடிலடி நான்கைப் பெற்று நடப்பது ஆசிரிய விருத்தமாகும். எட்டிற்கும் அதிகமான சீர் களைக் கொண்ட அடிகளையுடைய பாவை இரட்டையாசிரிய

மென்பர்.

எடு:-

“ஈட்டுவார் தவம லான்மற் றீட்டினா லியைவ தின்மை காட்டினார் விதியா ரஃது காண்கிற்பார் காண்மி னம்மா பூட்டுவார் முலைபொருந்தப் பொய்யிடை நையப் பூநீர் ஆட்டுவா ரமரர் மாத ராடுவார ரக்கர் மாதர்.’

ஆசுகவி

இவ்

(கடும்பாவலன்) ஒரு புலவன், இவ்வெழுத்தினாலாவது, இச் சொல்லினாலாவது. இப்பொருளினாலாவது, வணியினாலாவது எவ்வகைக் குற்றமும் நேராமல் இன்னவாறு பாடுவாயாக என்று கூறியவுடன் அப்பொழுதே அப்புலவனுடைய கருத்துக்கியைய விரைந்து பாடுவோன் ஆசுகவி என்று கூறப் பெறுவான்.

ஆற்றுப் படையின் இலக்கணம்

கூத்தர், பாணர், பொருநர், விறலி ஆகியநால்வரும் தாங்கள் வருகின்ற வழியிலே கண்ட தங்களை ஒத்தாரிடம், தாம்