உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/380

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எடு:-

யாப்பு

365

66

'அணிமல ரசோகின் றளிர்நலங் கவற்றி”

இயற்சீர் வெண்டளை

நிலைச்சீர் இயற்சீராக இருத்தல் வேண்டும். வருஞ்சீரின் முதலசை இயற்சீரின் ஈற்றசையோடு மாறுபட்டிருத்தல் வேண்டும். இவ்வாறு மாறுபட்டு அமைவதே இயற்சீர் வெண்டளையாகும். மாறுபடுதலாவது, நிலைச்சீரின் ஈற்றசை நேரசையாயின் வருஞ் சீரின் முதலசை நிரையசையாய் இருத்தல் வேண்டும். நிலைச்சீரின் ஈற்றசை நிரையசையாயின் வருஞ்சீரின் முதலசை நேரசையாய் இருத்தல் வேண்டும்.

எடு:-

நோய் போற்+பிறர்

-

மாமுன் நிரை வருதலால் இயற்சீர்

வெண்ட ளை. ள.

இயற்சீர்

இரண்டு அசைகளால் அமையும் சீர் இயற்சீர் தேமா புளிமா, கூவிளம், கருவிளம் என்ற வாய் பாட்டால் அழைக்கப் பெறும். இச்சீரை ஆசிரிய உரிச்சீர் என்றும் மாச்சீர் என்றும், விளச்சீர் என்றுங் கூறுவர்.

இயைபு

ஞண நமன யரல வழள என்னும் பதினொரு மெய் யெழுத்தும் ஈறாக வருஞ் செய்யுள் இயைபு என்னுஞ் செய்யுளாம். ன'கர ஈற்றான் முடிந்த இயைபு உடையது சிலப்பதிகாரம்; 'என்' என முடியும்.

இயைபுத் தொடை

அடிதோறும் ஈற்றெழுத்தாயினும் ஈற்றுச் சொல்லாயினும் ஒன்றிவருவது இயைபுத் தொடையாகும். எழுத்து ஒன்றிவருவது எழுத்தடியியைபு எனவும் சொல் ஒன்றிவருவது சொல்லடி யியைபு எனவும் பெயர் பெறும்.

எடு:-

66

“அவரோ வாரார் கார்வந் தன்றே

கொடிதரு முல்லையுங் கடிதரும் பின்றே."

என்பது எழுத்தடியியைபு.