உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/381

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

366

இளங்குமரனார் தமிழ்வளம்

4

“பரவை மாக்கடற் றொகுதிரை வரவும்

பண்டைச் செய்தி யின்றிவள் வரவும்.

என்பது சொல்லடியியைபு.

இரட்டைத் தொடை:-

செய்யுளின் ஓரடிமுழுவதும் வந்த சொற்களே, ஒரே பொருளிலேனும் அல்லது வேறு வேறு பொருளிலேனும் சீர்களாய் வருவது இரட்டைத் தொடையாகும்.

எடு:-

“வாழுமே வாழுமே வாழுமே வாழுமே

கூழேனு மீவார் குடி.

وو

இதில் ஓரடி முழுவதும் வந்த சொல்லே ஒரேபொருளில் வந்தமை காண்க.

66

ஓடையே யோடையே யோடையே யோடையே

கூடற் பழனத்துங் கொல்லி மலைமேலும்

மாறன் மதகளிற்று வண்பூ நுதன்மேலும்

கோடலங் கொல்லைப் புனத்துங் கொடுங்குழாய்

நாடி யுணர்வார்ப் பெறின்.

L

இதில் ஓடையே என்ற சொல் நீரோடை, மலைவழி, நெற்றிப் பட்டம், ஒருவகைச் செடி என்ற பொருளில் வந்து சீர்களாய் அமைந்தமை காண்க.

இரட்டை மணிமாலை

வெண்பாவுங் கலித்துறையும் மாறி மாறியமைய அந்தாதித் பாடல்கள் பாடுவது இரட்டை

தொடையாக இருபது

மணிமாலையாகும்.

இருகுறள் நேரிசை வெண்பா

ஒரு வெண்பாவின் இரண்டாவது அடியில் உள்ள தனிச் சொல்லை நீக்கிய பின் முதலிரண்டடிகளும் சேர்ந்து ஒரு குறள் வெண்பாவாகவும், பின்னிரண்டு அடிகளும் சேர்ந்து மற்றொரு குறள் வெண்பாவாகவும் அமையவேண்டும். இவ்வாறு அமையும் வெண்பாவே இருகுறள் நேரிசை வெண்பாவாகும். இரண்டாவது அடியின் மூன்றாவது சீர் உகரத்தை இறுதியினுடைய இயற் சீராய் நிற்கும் நேரிசை வெண்பாக்களையெல்லாம் இருகுறள் நேரிசை வெண்பா வென்று கொள்ளலாம்.

வண்பா