உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/382

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

367

நேரிசை

வெண்பாவின்

இலக்கணத்தைப் பெற்று பற்று ஒரு விகற்பத்தாலேனும் இரு விகற்பத்தாலேனும் முடிவுறும்.

எடு:-

“கலையி னொளியுங் கவிச்சுவையுங் கஞ்ச மலரழகு மின்குணமுங் கொண்டு-சிலைமாரன் கைம்மலரா லன்றிக் கருத்தால் வகுத்தமைத்தான் மொய்ம்மலர்ப்பூங் கோதை முகம்.

இவ்வெண்பாவின் உள்ள ‘சிலைமாரன்’ என்ற தனிச்

சொல் நீக்கியபின்,

“கலையி னொளியுங் கவிச்சுவையுங் கஞ்ச

மலரழகு மின்குணமுங் கொண்டு

எனவும்,

66

“கைம்மலரா லன்றிக் கருத்தால் வகுத்தமைத்தான் மொய்ம்மலர்ப்பூங் கோதை முகம்.

எனவும் இருகுறள் வெண்பாக்களாக

அமைவதைக்

காணலாம்.

இருபா இருபஃது

பத்து வெண்பாவும்

பத்து அகவலும் அந்தாதித்

தாடையாக அமைய இருபது சேர்ந்து வருவது

இருபஃது எனப்படும்.

இழைபு என்னுஞ் செய்யுள்

ருபா

ஒற்றொடு புணர்ந்த, வல்லெழுத் தடங்காது ஆசிரியப் பாவிற் கோதப் பட்ட நாலெழுத்தாதியாக இருபது எழுத்து முடிய உள்ள பதினேழு நிலத்தும் ஐந்தடியும் முறையானே வரத் தொடுப்பது இழைபு என்னுஞ் செய்யுளாம்.

இறுதிநிலை அளபெடைத் தொடை

முதற்சீரின் இறுதியெழுத்து அளபெடுத் தொன்றுவது

இறுதிநிலை அளபெடைத் தொடையாம்.

எடு:-

“மகாஅ ரன்ன மந்தி மடவோர் நகாஅ ரன்ன நளிநீர் முத்தம்."