உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/383

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

368

இளங்குமரனார் தமிழ்வளம்

இன்னிசைச் சிந்தியல் வெண்பா:-

4

இன்னிசை வெண்பாவே போலத் தனிச் சொல் இன்றி ஒரு விகற்பத்தானும், இருவிகற்பத்தானும் பல விகற்பத்தானும் மூன்றடியான் வருவனவும், பாவின் முதலடியில் ஒரூஉ எதுகை யுடைய தனிச்சொல் பெற்று ஒரு விகற்பத்தானும், இரு விகற்பத் தானும், பல விகற்பத்தானும் மூன்றடியாய் வருவனவும், முதலிரண்டடிகளிலும் ஒரூஉ எதுகையுடைய தனிச்சொல் பெற்று விகற்பத்தானும் இருவிகற்பத்தானும் விகற்பத்தானும் மூன்றடியாய் வருவனவும் இன்னிசைச் சிந்தியல் வெண்பாவாகும். இரண்டாம் அடியில் தனிச் சொல் நிற்பின் பா பல விகற்பங்களையுடையதாய் இருத்தல் வேண்டும்.

எடு:-

ஒரு

“விழிமதுத்தார் மாறன் மணிவரைமேன் மாதர்

விழியெழுதி னாலுமிணை வெற்பெழுதி னாலும் மொழியெழுத லாமோ மொழி.”

பல

இது தனிச்சொல் இன்றி ஒரு விகற்பத்தான் வந்த சிந்தியல் வெண்பா.

“சுரையாழ அம்மி மிதப்ப

வரையனைய

யானைக்கு நீத்து முயற்கு நிலையென்ப

கானக நாடன் சுனை.

இது முதலடியில் தனிச்சொல் பெற்று இருவிகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

66

“முல்லை முறுவலித்துக் காட்டின - மெல்லவே

சேயிதழ்க் காந்தள் துடுப்பீன்ற - போயினார் திண்டேர் வரவுரைக்குங் கார்.”

99

இது முதலிரண்டடிகளிலும் தனிச் சொல் பெற்றுப் பல விகற்பத்தான் வந்த இன்னிசைச் சிந்தியல் வெண்பா.

இன்னிசை வெண்பா

ஒரு விகற்பத்தானும், பல விகற்பத்தானும் வந்து நான் கடியாய்த் தனிச் சொல் இன்றி நடப்பதும், இரண்டாமடியின் இறுதி தனிச் சொல் பெற்று மூன்று விகற்பத்தான் வருவனவும், மூன்றாமடியில் இறுதி தனிச் சொல் பெற்று இரண்டு