உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/384

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

369

விகற்பத்தான் வருவனவும், தனிச் சொல் இன்றிப் பல விகற்பமாகி அடிதோறும் ஒரூஉத் தொடை பெற்று வருவனவும், ஈற்றடி தவிர எல்லா அடிகளிலும் தனிச் சொல்பெற்று வருவனவும், நேரிசை வெண்பாவின் சிறிது வேறுபட்டு நான்கடியான் வருவனவும் இன்னிசை வெண்பாவாம்.

உத்தி

ஒரு நூலால் அறிவிக்கப் படும் பொருளை நூல் வழக்கோடும் உலக வழக்கோடும் பொருந்தக் காண்பித்து ஏற்குமிடத்தை அறிந்து இவ்விடத்திற்கு இப்படியாகுமென்று நினைத்துத் தக்கவாறு செலுத்துவது தந்திரவுத்தியாகும். (தந்திரம்-நூல்,

பொருந்துமாறு).

உரிச்சீர்

உத்தி-

மூன்று அசைகளால் ஆகும் சீர் உரிச்சீர். தேமாங்காய், புளிமாங்காய், கூவிளங்காய், கருவிளங்காய் என்னும் வாய்பாட் டால் அழைக்கப் பெறும். இச்சீரை வெண்பா உரிச்சீர் என்றும், வெண்சீர் என்றும், காய்ச்சீர் என்றுங் கூறுவர். நிரையசையை இறுதியில் பெற்ற மூன்று அசைகளால் ஆன சீர் தேமாங்கனி, புளிமாங்கனி, கூவிளங்கனி கருவிளங்கனி என்னும் வாய் பாட்டால் அழைக்கப் பெறும். இச்சீர் வஞ்சிப் பாவிற்கு உரிய சீராகும். அதனால் இதை வஞ்சியுரிச்சீர் என்றும் தனிச்சீர் என்றும், வஞ்சிச்சீர் என்றும் அழைப்பர்.

உரிச்சீர்

இயற்சீர் முடிவுக்குப் பின் அவ்விடத்தில் நேரசை நிற்கு மானால் அங்ஙனம் வரும் மூவசைச்சீர் நான்கும் வெண்பா உரிச்சீர் ஆகும்.

எடு:-

உலா

"தேமாங்காய்-நேர் நேர் நேர்

புளிமாங்காய் - நிரை நேர் நேர் கூவிளங்காய் - நேர் நிரை நேர் கருவிளங்காய் - நிரை நிரை நேர்

இளம்பருவமுற்ற தலைவனைக் குலத்தாலும் குடிப்பிறப் பாலும் மங்கலங்களாலும் வழிமுறையாலும் இன்னானென்பது தோன்றக்கூறி அணிகலன்களால் அழகு செய்துகொண்டு