உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

இளங்குமரனார் தமிழ்வளம்

4

முதன்மையெய்திய பெண்கள் ய பெண்கள் நெருங்கிய அழகிய தெரு விடத்திலே அவன் உலா வருங்கால் பேதைமுதலிய ஏழ்பருவப் பெண்களுங் கண்டு தொழ உலாவந்ததாக நேரிசைக் கலி வெண்பாவாற் கூறுவது உலாவாகும்.

ஐந்து முதல் ஏழளவும் பேதை; எட்டு முதற்பதினொன்றளவும் பெதும்பை; பன்னிரண்டு முதற்பதின்மூன்றளவு மங்கை; பதி னான்கு முதல் பத்தொன்பதளவு மடந்தை; இருபது முதல் இருபத்தைந்தளவும் அரிவை; இருபத்தாறு முதல் முப்பத் தொன்றளவும் தெரிவை; முப்பத்திரண்டு முதல் நாற்பதளவும் பேரிளம்பெண்.

உலாமடல்

கனவில் ஒரு பெண்ணைக் கண்டு கலவியின்பம் நுகர்ந்தோன் விழித்தபின் அவள் பொருட்டு மடலூர்வே னென்பதைக் கலி வெண்பாவாற் பாடுவது உலாமடல். உழத்திப் பாட்டு

இது பள்ளு என்றும் வழங்கப்பெறும். கடவுள் வணக்கம், மூத்தபள்ளி, இளையபள்ளி, குடும்பன் வரவு அவனுடை பெருமைகூறல், அவர் வரலாறு, நாட்டுவளன், குயிற்குரல் கேட்டல், மழை வேண்டித் தெய்வம் பரவல், மழைக் குறியோர்தல், ஆற்றின் வரவு, அதன்சிறப்பு. இவற்றிற்கிடையே அகப்பொருட் டுறையுங் கூறிப் பண்ணைத் தலைவன் வரவு; பள்ளிகளிருவர் முறையீடு, இளையாளையனுப்பல், பள்ளன் வெளிப்படல், பண்ணைச் செய்தி வினவல், அவனதனைக் கூறல், ஆயரை வருவித்தல், அவர்வரல், அவர் பெருமைகூறல், மூத்த பள்ளி முறையீடு, குடும்பன் வரல், அவனைத் தொழுவில் மாட்டல், அவன் புலம்பல், மூத்த பள்ளி உணவு கொண்டு வரல், அவன் அவளோடு கூறல், அவள் அவனைப் பொறுத்துக் கொள்ள வேண்டல், அவள் மறுத்தல், அவன் சூளுறல், அவன் அவளை மீட்க வேண்டிப் பண்ணைத் தலைவனைப் பரவல், விதைமுதலிய வளங்கூறல், உழவர் உழுதல், காளை வருளல், அது பள்ளனைப் பாய்தல், பள்ளிகள் புலம்பல், பண்ணைத் தலைவனுக்கறிவித்தல், நாற்று நடல், விளைந்தபின் செப்பஞ் செய்தல். நெல்லளத்தல், மூத்தபள்ளி முறையீடு, பள்ளிகள் ஏசல், ஆகிய உறுப்புக்கள் இடையிடையே அமையப் பாட்டுடைத் தலைவனுடைய பெருமை ஆங்காங்கு விளங்கச் சிந்தும் விருத்தமும் கலந்துவரப் பாடுவது உழத்திப்பாட்டாகும்.