உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

371

உழிஞைமாலை

பகைவர் ஊர்ப்புறஞ்சூழ உழிஞைப் பூமாலை சூடிய படை வளப்பத்தைக் கூறுவது உழிஞை மாலையாகும்.

உறழ்கலிப்பா

ஒருவர் கூறுவதும் மற்றவர் விடை பகர்வதுமாய்ப் பொருள் நடந்து வருங்கலிச் செய்யுள் உறழ் கலிப்பா . சுரிதகம் பெற்றும் பெறாமலும் இடையிடையே அயல்பாக்களின் அடிகள் பெற்றும் பலவிதமாய் உறழ்கலிப்பா வரும். இதன் உறுப்பை வரையறுத்துக் கூறுவதற்கில்லை. நெடிலடிகளும் இப்பாவில் இடம்பெறும்.

உறுப்பினகவல்

ஒரு பொருண்மேற் பரந்திசைப்பது உறுப்பினகவலாகும். உற்பவமாலை

திருமால் பிறப்புப்பத்தையும் ஆசிரிய விருத்தத்தாற்

கூறுவது உற்பவமாலையாகும்

ஊசல்

66

உற்பவம்=பிறப்பு

ஆசிரிய விருத்தத்தினாலாவது கலித்தாழிசையினாலாவது ஆடீரூசல்” “அடாமோவூசல்” என்று முடியுமாறு பாடுவது.

ஊரின்னிசை

பாட்டுடைத் தலைவனுடைய ஊரைச் சார இன்னிசை வெண்பாவால் தொண்ணூறேனும் எழுபதேனும் ஐம்பதேனும் பாடுவது.

ஊர்நேரிசை

பாட்டுடைத் தலைவன் ஊரைச் சார நேரிசை வெண்பாவால் தொண்ணூறேனும் எழுபதேனும் ஐம்பதேனும் பாடுவது ஊர் நேரிசையெனப்படும்.

ஊர் வெண்பா

வெண்பாவால் ஊரைச் சிறப்பித்துப் பாடுவது ஊர்

வெண்பாவாகும்.