உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

எண்

இளங்குமரனார் தமிழ்வளம்

4

முதலில் தொடுத்த உறுப்புப் பெருகிப் பின் தொடுக்கும் உறுப்புச் சுருங்கி வரத் தொடுப்பது எண்ணாகும்.

எண் செய்யுள்:-

பாட்டுடைத் தலைவன் ஊரையும் பெயரையும் பத்துமுதல் ஆயிரமளவும் எண்ணுறும்படி ஆசிரியப் பாவாற் பாடப் பெறுவது. இஃதன்றி எட்டுச் செய்யுளே பாடப் பெறுவதெனவுங் கூறுவர்.

எழுகூற்றிருக்கை:-

இது சித்திர கவி வகையைச் சேர்ந்தது. முதலில் மூன்று அறைகளும், மேல் இரண்டிரண்டறைகளும் கூடும்படி ஏழுவரை அறைகளாக்கி முறையானே குறுமக்கள் முன்னின்றும், புக்கும், போந்தும் விளையாடும் பெற்றியானும் ஒன்றுமுதலிலும் இறுதி யிலும் வரவும், ஒன்றுமுதல் ஏழு எண்கள் வரவும் ஆண்மைத் தன்மை (புருடார்த்தம்) பயக்கும் ஏழுபொருள்கள் வரவும் ஆசிரியப்பாவாற் பாடப்படுவது.

எழுத்து:-

யாப்பிலணக்கத்தின் உறுப்பு ஆறனுள் ஒன்று. எழுத் திலக்கணத்தில் கூறிய முதல் சார்பு என்ற இருவகை எழுத்துக் களும் உறுப்பாக அமையும். செய்யுளடிக்கு எழுத்தெண்ணும் போது மெய்யெழுத்துக்கள் எண்ணப்படா. தளைசிதையவரு மிடத்துக் குற்றியலிகரமுங் குற்றியலுகரமும் அளபெடையும் தள்ளுண்டுபோம்.

எழுத்துப் பொருத்தம்

ஒற்றுப்பட மூன்றும் ஐந்தும் ஏழும் ஒன்பதுமாகிய எழுத்தால் முதன் மொழிக்கு வருவது நன்று. நான்கும் ஆறும் எட்டுமாகிய வெழுத்தால் முதன்மொழிக்கு வருவது தீது.

ஏந்திசையகவல்

6

எழுத்திறந்திசைப்பது ஏந்திசையகவலாகும்.

ஒத்தாழிசைக் கலிப்பா

தரவு ஒன்று, தாழிசை மூன்று, தனிச்சொல், சுரிதகம் பெற்று வருவது ஒத்தாழிசைக் கலிப்பாவாகும். இது நேரிசை ஒத்தாழிசை, அம்போதரங்க ஒத்தாழிசை, வண்ணக ஒத்தாழிசை என மூன்று வகைப்படும். இம்மூன்று வகைக் கலிப்பாக்களிலும், மூன்று தாழிசைகள் ஒத்துவருதலால் ஒத்தாழிசைக் கலிப்பா எனப் பெயர் பெறுவதாயிற்று.