உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

373

ஒருபா ஒருபஃது

அகவல், வெண்பா, கலித்துறை இவற்றுள் ஒன்றினால் பத்துப்பாடல் அந்தாதித் தொடையாகப் பாடுவது ஒருபா ஒருபஃது.

ஒருபோகு

கலியுறுப்புக்கள் சில நீங்கிவரும் மயங்கிசைக் கொச்சகமே ஒருபோகு. இது தாழிசை ஒருபோகு அம்போதரங்க ஒருபோகு, வண்ணக ஒருபோகு என மூன்று வகைப்படும். தரவின்றித் தாழிசை, தனிச்சொல், சுரிதகம் பெற்றுவருவது தாழிசை ஒருபோகு தனிச்சொல், சுரிதகம் இன்றித் தாழிசை தனித்து நின்றும் தாழிசை ஒருபோகு ஆதலும் உண்டு. தரவு அல்லது தாழிசையும் இல்லாமல் அம்போதரங்கம், தனிச்சொல் சுரிதகம் பெற்று வருவது அம்போதரங்க ஒருபோகு தரவு அல்லது தாழிசையின்றி வண்ணக உறுப்பும் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்று வருவது வண்ணக ஒருபோகு.

ஒரூஉ அளபெடை

·

முதற்சீர் நான்காவதுசீர் ஆகிய சீர்களில் எழுத்துக்கள் அளபெடுத்து நிற்பது ஒரூஉ அளபெடையாகும்.

எடு:-

“காஅய்ச் செந்நெற் கறித்துப் போஓய்”

ஒரூஉ இயைபு

ஈற்றுச் சீராக வந்த சொல்லோ எழுத்தோ அதற்கு நான்காவதான சீரில் ஒன்றிவரல் ஒரூஉ இயைபாகும்.

எடு:-

“நிழலே யினியத னயலது கடலே'

ஒரூஉ எதுகை

99

அடியின் முதல்சீர் நான்காவது சீர் ஆகிய இரு சீர்களிலும் இரண்டாவது எழுத்து ஒன்றி நிற்றல் ஒரூஉ எதுகையாகும்.

எடு:-

“மின்னவி ரொளிவடந் தாங்கி மன்னிய’