உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

374

ஒரூஉத் தொடை

இளங்குமரனார் தமிழ்வளம்

4

நாற்சீருள்ளும் இடையிருசீரொழித்து, ஒழிந்த முதற்சீரும் நான்காஞ்சீரும் மோனை முதலாயின ஒன்றி வரத் தொடுப்பது ஒரூஉத் தொடையாகும்.

எ.டு.:-

66

“அம்பொற் கொடுஞ்சி நெடுந்தேர் அகற்றி” - இது ஒரூஉ

மோனை.

"மின்னிவ ரொளி வடந் தாங்கி மன்னிய”

-

து ஒரூஉ

எதுகை.

"குவிந்து சுணங்கரும்பி கொங்கை விரிந்து” - இது ஒரூஉ

முரண்.

"நிழலே இனியத னயலது கடலே” - இது ஒரூஉ இயைபு. “காஅய்ச் செந்நெற் கறித்துப் போஒய்”

பெடை.

ஓரூஉ முரண்

-

து ஒரூஉ அள

அடியின் முதற்சீர் நான்காம் சீர் ஆகிய இருசீர்களின் சொற்கள் முரணி நின்றால் ஒரூஉ முரண்.

எடு:-

66

குவிந்து சுணங்கிய கொங்கை விரிந்து.

ஒரூஉ மோனை

அடியின் முதற்சீர் நான்காம்சீர் ஆகிய இருசீர்களில் முத லெழுத்து ஒன்றி நிற்றல் ஒரூஉ மோனையாகும். எடு:-

“அம்பொற் கொடிஞ்சி நெடுந்தே ரகற்றி” ஒலியந்தாதி

பதினாறு கலை ஓரடியாக வைத்து, இவ்வாறு நான்கடிக்கு அறுபத்துநான்கு கலை வகுத்துப் பலசந்தமாக வண்ணமும், கலைவைப்புந் தவறாமல் அந்தாதித் தொடையில் முப்பது செய்யுளியற்றுவது. சிறுபான்மையெட்டுக் கலையாலும் வரும். வெண்பா, அகவல், கலித்துறை ஆகிய இம் மூன்றையும் பத்துப் பத்தாக அந்தாதித் தொடரிற் பாடுவதுமுண்டு.