உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/390

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

375

ஓரசைச்சீர்

தனித்துவரும் நேரசையும் நிரையசையுமாகிய இரண்டுமாம். வை பெரும்பாலும் வெண்பாவின் ஈற்றிலும் சிறுபான்மை வ மற்றவற்றுள்ளும் வரும். இவற்றிற்கு வாய்பாடு நேர்-நாள். நிரை- மலர் என்பன.

எடு:-

"மலர்மிசை யேகினான் மாண்டி சேர்ந்தார்

66

நிலமிசை நீடுவாழ் வார்.’

99

“கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன் நற்றா டொழாஅ ரெனின்.’

இக்குறள் வெண்பாக்களின் இறுதியில், வார்-நாள், ரெனின்-மலர் என ஓரசைச் சீர்கள் வந்தவாறு காண்க.

கடிகை வெண்பா

தேவரிடத்திலும் அரசரிடத்திலும் நிகழுங்காரியம் கடிகை யளவிற்றோன்றி நடப்பதாக முப்பத்திரண்டு நேரிசை வெண் பாக்கள் பாடுவது.

கடைநிலை

என்வரவைத் தலைவற்கிசையெனக் கடைக்கணின்று வாயில் காப்போனுக்குக் கூறுவது.

கட்டளைக் கலித்துறை

நெடிலடி நான்கைப் பெற்று அவ்வடிகளின் முதல் நான்கு சீர்கள் வெண்டளை தழுவியதாய் அமைந்து, கடைசிச்சீர்கள் கூவிளங்காய் அல்லது கருவிளங்காய்ச் சீர்களில் ஒன்றைப் பெற்று, பாவின் ஈற்றடி ஏகாரத்தில் முடிவது கட்டளைக் கலித் துறையாகும். இவ்வாறு அமைந்த பாவின் அடிகள் நேரசையை முதலில் உடையதாயின் அடிகள் ஒவ்வொன்றும் பதினாறு எழுத்துக்களையும், நிரையசையை முதலில் உடையதாயின் பதினேழு எழுத்துக்களையும் கொண்டிருக்கும். எழுத்தை எண்ணுங்கால் மெய்யெழுத்தை நீக்கி எண்ணுதல் வேண்டும். அடிதோறும் மோனைத் தொடை அமைய வேண்டும்.