உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/391

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

எடு:-

இளங்குமரனார் தமிழ்வளம்

4

“பேய்போல் திரிந்து பிணம்போற் கிடந்திட்ட பிச்சையெல்லாம் நாய்போ லருந்தி நரிபோலுழன்றுநன் மங்கையரைத் தாய்போற் கருதித் தமர்போ லனைவர்க்குந் தாழ்மைசொல்லி சேய்போ லிருப்பர்கண் டீருண்மை ஞானந் தெளிந்தவரே.

கட்டளைக் கலிப்பா:-

நான்கு சீர் கொண்ட இரட்டை அடிகளையுடைய நான் கடிகளைப் பெற்று, தேமா, புளிமா என்னும் மாச்சீரை முதல் சீராகக் கொண்டு நடக்குந் தன்மையது. அதன் முதலசை நேரசை யாயின் (தேமா) அந்த அடி பதினோரெழுத்தும், நிரையசை யாயின் (புளிமா) அந்த அடி பன்னிரண்டு எழுத்தும் பெறும். (எழுத்தை எண்ணுங்கால் ஒற்றெழுத்தை நீக்கி எண்ணுதல் வேண்டும்)

எடு:-

“மனைவி மக்களும் மாண்டு மறைந்தனர் வாழ்ந்த வீடுங் குடியு மிழந்தனன்

இனிய நட்பினர் யாவரு மேகினர்

ஏழை யாண்டியே காங்கியு மாயினேன் எனையு மிந்திலை கண்டனை யின்னுமிங் கின்ன லேது மிழைத்திட வுள்ளதோ உனையு மன்னையென் றோதி யழைப்பதோ உலகெ லாந்தருந் தேவிகா மாட்சியே!’

கண்படைநிலை

அரசரும் அரசரைப் போல்வாரும் அவைக்கண் நெடிது வைகியவழிமருத்துவர்களும் அமைச்சர்களும் கண்துயில் கோடலைக் கருதிக் கூறுவது.

கமகன்

மெய்யறிவுத் திறமையினாலாவது கல்விப் பெருமையி னாலாவது ஒருவன் சொல்லிய நூல் விகற்பத்தைத் தான் பயிலா திருந்தும் பொருள் விரிக்க வல்லவன் கமகனாவான்