உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/392

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

377

கலம்பகம்

வெண்பா கலித்துறை ஒருபோகு முதற்கவியுறுப்பாக முன் கூறிப், புயவகுப்பு, மதங்கு, அம்மானை, காலம், சம்பிரதம், கார், தவம், குறம், மறம், பாண், களி, சித்து, இரங்கல், கைக்கிளை, தூது, வண்டு, தழை, ஊசல் என்னும் பதினெட்டுறுப்புகள் பொருந்த, மடக்கு, மருட்பா, அகவற்பா, கலிப்பா, வஞ்சிப்பா, ஆசிரிய விருத்தம், கலிவிருத்தம், கலித்தாழிசை, வஞ்சி விருத்தம், வஞ்சித்துறை, வெண்டுறை யென்னுமிவற்றால், இடையே வெண்பா, கலித்துறை கலந்து அந்தாதித் தொடையாற் பாடுவது கலம்பகமாகும்.

பிச்சியார், கொற்றியார், இடைச்சியார் என்பனவும் இந்நாளில் இயைந்து வரும். கடவுளர்க்கு நூறும் அந்தணர்க்குத் தொண்ணூற் றைந்தும், அரசர்க்கும், அமைச்சருக்கு எழுபதும், வணிகர்க்கு ஐம்பதும்,வேளாளருக்கு முப்பதுமாகப் பாடப்பெறும்.

கலித்தளை

நிலைச்சீர் மூவசைகளையுடைய காய்ச்சீராய் இருக்க வேண்டும். வருஞ்சீர் எதுவாயினும் முதலசை நிரையசையாய் இருக்க வேண்டும். இவ்வாறு காய்முன் நிரை வருவது கலித் தளையாகும். இக்கலித்தளை சிறப்புடைக் கலித்தளை, சிறப்பில் கலித்தளை என இருவகைப்படும். சிறப்புடைக் கலித்தளை யாவது நிலைச்சீரும் காய்ச்சீராக விருந்து வருஞ்சீரும் நிரையசையை முதலிலுடைய காய்ச்சீராக அமைவது. சிறப்பில் கலித்தளையாவது நிலைச்சீர் காய்ச்சீராயிருந்து வருஞ்சீர் கனியீற்று உரிச்சீராகவோ அல்லது இயற்சீராகவோ அமைவது. எடு:-

செங்கனிவாய் கருநெடுங்கண் - காய் முன்நிரை- சிறப்புடைக்

கலித்தளை

(கூவிளங்காய் கருவிளங்காய்)

மாவீன்ற தளிர்மிசை - சிறப்பில் கலித்தளை. (தேமாங்காய் கருவிளம்)

கலித்தாழிசை

இரண்டடியும் இரண்டிற்கும் அதிகமான அடிகளையும் பெற்று, ஈற்றடி அளவு மிகுந்தும், ஏனையடிகள் தம்முள் அள வொத்தும் ஒவ்வாமலும் ஒரு பொருள்மேல் மூன்றாக