உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

378

இளங்குமரனார் தமிழ்வளம்

4

அடுக்கியும் தனித்தும் வருவது கலித்தாழிசையாகும். ஈற்றடி மிகுந்தும் ஏனையடிகள் தம்முள் அளவொத்து நடப்பின் அது சிறப்புடைக் கலித்தாழிசையாகும். ஒவ்வாது நடப்பது சிறப்பில் கலித்தாழிசையாகும்.

எடு:-

“செல்லார் பொழிற்றில்லைச் சிற்றம் பலத்தெங்கள்

பொல்லா மணியைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்;

முத்தேவர் தேவை முகிலூர்தி முன்னான

புத்தேளிர் போலப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்;

ஆங்கற் பகக்கன் றளித்தருளுந் தில்லைவனப்

பூங்கற் பகத்தைப் புகழ்மினோ வம்மின் புலவீர்காள்"

இஃது ஒரு பொருண்மேல் மூன்றடுக்கி ஈற்றடிமிக்கு வந்த கலித்தாழிசை

“வாள்வரி வேங்கை வழங்குஞ் சிறு நெறியெங் கேள்வரு போதினெழால் வாழி வெண்டிங்காள் கேள்வரு போதினெழாதாய்க் குறாலியரோ நீள்வரி நாகத் தெயிறே வாழி வெண்டிங்காள்."

இஃது ஒரு பொருள் மேல் தனித்து வந்த கலித்தாழிசை. கலித்துறை

நெடிலடி நான்கு பெற்று நடப்பது கலித்துறையாகும். கு இதைக் கலிநிலைத்துறை என்றுங் கூறுவர்.

எடு:-

"யானுந் தோழியு மாயமு மாடுந் துறைநண்ணித் தானுந் தேரும் பாகனும் வந்தென் னலனுண்டான் தேனும் பாலும் போல்வன சொல்லிப் பிரிவானேல் கானும் புள்ளும் கைதையு மெல்லாங் கரியன்றே”

கலிப்பாவின் இலக்கணம்

வெண்சீர் மிகப்பெற்று, மாச்சீரும் விளங்கனிச்சீரும் பெறாது, பிறசீர்களும் சிறுபான்மை கலந்து கலித்தளையும் அயற்றளை யுந்தழுவி, துள்ளலோசையுடைத்தாய் தரவு, தாழிசை, அராகம் அம்போதரங்கம், தனிச் சொல், சுரிதகம் என்னும் ஆறு உறுப்பினுள் ஏற்பன கொண்டு புறநிலை வாழ்த்தும் வாயுறை