உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/394

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

379

வாழ்த்தும் அவையடக்கியலும், செவியறிவுறூஉவு மென்னும் அப்பொருண் மேல் வராது, பதின் மூன்று எழுத்து முதலாக விருபதெழுத்தின்காறும் உயர்ந்த எட்டு நிலமும் பெற்று நாற்சீர் அடியால் வருவது கலிப்பாவாகும். அக்கலிப்பா ஒத்தாழிசைக் கலிப்பா, வெண்கலிப்பா, கொச்சகக் கலிப்பாவென மூவகைப்படும். கலிவிருத்தம்

அளவடி

நான்கைப் பெற்று, துள்ளலோசையின்றி நடப்பது கலிவிருத்தமாகும். பெரும்பாலும் இயற்சீர்களால் அமைவது சிறப்புடையதாகும். பொழிப்பு மோனை பெற்று அமையின் ஓசை சிறப்பாக அமையும்

எடு:-

"தேம்பழுத் தினியநீர் மூன்றுந் தீம்பலா மேம்பழுத் தளிந்தன சுளையும் வேரியும் மாம்பழக் கனிகளு மதுத்தண் டீட்டமும் தாம்பழுத் துளசில தவள மாடமே.

கலிவெண்பா

செப்பலோசை சிதையாமல் வெண்டளை பிறழாத பலவடி களைக் கொண்டு ஈற்றடி முச்சீரான் முடிவது கலிவெண்பாகும். இதற்கும் பஃறொடை வெண்பாவிற்குமுரிய வேறுபாடு:- இரண்டு செய்யுட்களும் அளவடிகளையுடைய தாய், வெண்டளை பெற்று, செப்பலோன சையிற் சிறிதும் சிதையாமல், ஈற்றடி முச்சீரான் முடிவதாயினும் செப்பலோசையிற் சிறிதும் சிதையாமல் நடப்பது பஃறொடை வெண்பாவென்றும், சிறிதேனும் சிதையுமாயின் கலிவெண்பா என்றுங் கொள்ள வேண்டும். பஃறொடை வெண்பா வெளித் தோன்றும் பொருளோடு முடிவது. கலிவெண்பா வெளித்தோன்றும் பொருளோடு உட் பொருளாக வேறோர் பொருளை உட்கொண்டிருப்பது.

கவி

வெண்பா, ஆசிரியம், கலிப்பா, வஞ்சிப்பா ஆகிய நான்கு வகைக் கவிகளையும் விரைந்து பாடுவோன் கவி என்று பெயர் பெறுவான்.

கழிநெடிலடி

ஆறுசீர் முதல் பதினாறுசீர்கள் வரையில் உள்ள சீர்களால் அமைந்த அடிகள் கழிநெடிலடிகளாகும். ஆயினும் ஆறு, ஏழு,