உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

380

இளங்குமரனார் தமிழ்வளம்

4

எட்டுச் சீர்களையுடைய அடிகள் தலையாய கழி நெடிலடி யென்றும், ஒன்பது முதல் பத்துச் சீர்கள் வரையுள்ள அடிகள் இடையாய கழிநெடிலடியென்றும், பத்துக்கு அதிகமான சீர்களைக் கொண்ட அடிகள் கடையாய கழிநெடிலடியென்றுங் கூறுவர். கழிநெடிலடிக்கு அளவு பதினெட்டு எழுத்து முதலாக இருபது எழுத்தளவும் என்பர் தொல்காப்பியர். (நூற்றிருபத்து எட்டுச் சீர்வரை விரிந்தது இது)

காஞ்சிமாலை:-

பகைவர்

ஊர்ப்புறத்திலே

காஞ்சிப் பூமாலை

சூடியூன்றலைக் கூறுவது காஞ்சிமாலையாகும்.

காப்புமாலை:-

தெய்வங்காத்தலாக மூன்று செய்யுளேனும் ஐந்து செய்யு ளேனும் பாடுவது காப்பு மாலையாகும்.

காப்பியத்தின் இலக்கணம்:-

அறம், பொருள், இன்பம், வீடென்னும் நான்கினுள் ஒன்றும் பலவுங் குறைந்து வருவது காப்பியமாகும். இதனை சிறுகாப்பியமெனினும் ஒக்கும். உலா, மடல், பிள்ளைத் தமிழ், பரணி ஆற்றுப் படை முதலியன இதில் அடங்கும். இஃது ஒருவகைச் செய்யுளானும் பலவகைச் செய்யுளானும், உரை நடை கலந்தும் வரப்பெறும்.

கீழ்க்கதுவாய் எதுகை

அளவடியின் மூன்றாவது சீர் நீங்கலாக மற்றைய சீர்களின் இரண்டாவது எழுத்து ஒன்றி வருதல் கீழ்க்கதுவாய் எதுகையாகும். எ.டு:- “அன்ன மென்பெடை போலப் பன்மலர்க்.’

கீழ்க்கதுவாய் இயைபு

99

அளவடியின் 4,3,1 ஆகிய சீர்களில் உள்ள சொல்லோ எழுத்தோ ஒன்றிவரல் கீழ்க்கதுவாய் இயைபாகும்.

எடு:- “பல்லே தளவம் பாலே சொல்லே.'

கீழ்க்கதுவாய் அளபெடை

99

அளவடியில் உள்ள மூன்றாவது சீர் நீங்கலாக ஏனைய சீர்களில் உள்ள எழுத்துக்கள் அளபெடுப்பது கீழ்க்கதுவாய் அளபெடையாம்.

எடு:- “மீஇ னாஅர்ந்துகளுஞ் சீஇர்."