உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழ்க்கதுவாய் முரண்

யாப்பு

381

அளவடியின் மூன்றாவது சீர் நீங்கலாக ஏனைய சீர்களில் உள்ள சொற்கள் முரணி நிற்றல் கீழ்க்கதுவாய் முரண்.

எடு:- “இருக்கையு நிலையு மேந்தெழி லியக்கமும்”

கீழ்க்கதுவாய் மோனை

அளவடியின் மூன்றாவது சீர் தவிர மற்ற சீர்களின் முத லெழுத்து ஒன்றி வருவது கீழ்க்கதுவாய் மோனையாகும். எடு:- “அவிர்மதி யனைய திருநுத லரிவை”

குழமகன்

ளமைத் தன்மையையுடைய குழமகனைப் பெண்கள் புகழ்வதாகக் கலி வெண்பாவாற் பாடுவது.

குறட்டாழிசை

நாற்சீரான் மிக்க பல சீரான் வரும் அடி இரண்டாய் ஈற்றடி குறைந்து வருவனவும், விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையு மின்றிக் குறள்வெண் செந்துறையிற் சிதைந்து வருவனவும், வேற்றுத்தளை விரவிய குறள்வெண்பாவுமென மூன்றுவகைப் பட்டு வரும்.

எடு:- “நண்ணு வார்வினை நைய நாடொறு நற்ற வர்க்கரசாய ஞானநற் கண்ணி னானடி யேயடை வார்கள் கற்றவரே.”

66

இது முதலடி பல சீரான்மிக்கு ஈற்றடி குறைந்து வந்தது.

“அறுவர்க் கறுவரைப் பெற்றுங் கவுந்தி

66

மறுவறு பத்தினி போல் வையி னீரே.”

இஃது அளவொத்து வெண்டளை பெற்று வந்தது.

‘வண்டார்பூங் கோதை வரிவளைக்கைத் திருநுதலாள்

பண்டைய ளல்லள் படி.

99

து வேற்றுத்தளை விரவியது.

குறத்திப் பாட்டு

இஃது இந்நாளில் குறவஞ்சியென்று வழங்குகிறது. தலைவன் உலா வரவு, மகளிர்காமுறல், மோகினி வரவு, உலாப்போந்த தலைவனைக் கண்டுமயங்கல், திங்கள் தென்றல் முதலிய துயரம் பனம், பாங்கி உற்ற தென்னெனவினவல், தலைவிபாங்கி