உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/397

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

382

இளங்குமரனார் தமிழ்வளம் 4

யோடுற்றது கூறல், பாங்கி தலைவனைப் பழித்துக் கூறல், தலைவி தலைவனைப் புகழ்ந்து கூறல், தலைவி பாங்கியைத் தூதுவேண்டல், தலைவி பாங்கியோடு தலைவனடையாளங் கூறல், குறத்திவரவு, தலைவி குறத்தியை மலைவளம் முதலியன வினவல், குறத்திமலை வளநாட்டு வளம் முதலியன கூறல், தலைவன் பதிச்சிறப்பு, கிளைச்சிறப்பு முதலியனகூறல், குறி சொல்லிவந்தமைகூறல், தலைவி குறிவினவல், குறத்திதெய்வம் பரவல், குறிதேர்ந்து நல்வரவு கூறல் தலைவி பரிசிலுதவிவிடுத்தல், குறவன் வரவு, புள்வரவு கூறல், கண்ணிகுத்தல், புட்படுத்தல், குறத்தியைக் காமுற்றுத் தேடல், குறவன் பாங்கனொடு குறத்தியடையாளங்கூறல், குறவன் குறத்தியைக் கண்ணுறல், குறவனணிமுதலிய கண்டு ஐயுற்று வினவல், அவள் விடைகூறல் முதலிய இத்தகைய பெரும்பான்மையுறுப்புகளால், அகவல், வெண்பா, தரவு, கொச்சகம், கலித்துறை, கழிநெடில் விருத்தம், கலிவிருத்தம் முதலிய செய்யுட்களை இடையிடையே கூறிச் சிந்து முதலிய நாடகத்தமிழாற்பாடுவது குறத்திப்பாட்டாகும்.

குறளடி

இரண்டு சீர்களைக் கொண்டது குறௗடியாகும். இவ்வடி வஞ்சிப்பா, வஞ்சித்துறை ஆகியவற்றிற்கு உரியது. நான்கு எழுத்து முதலாக ஆறெழுத்து இறுதியாக ஏறிய மூன்று நிலத்தையுடைத்து குறளடி என்பர் தொல்காப்பியர்.

எடு:- “நாடீர் நாடோறும்'

குறளடி வஞ்சிப்பா

வஞ்சியுரிச்சீர் எனப்படும் கனியீற்று மூவசைச் சீர்கள் அல்லது நிரையசையை இறுதியிலுடைய நாலசைச் சீர்கள் ரண்டைப் பெற்று, மூன்றடிகள் சிற்றெல்லையாகவும் பாடுவோரின் உள்ளக் கருத்திற்கேற்ப பலவடிகளைப் பேரெல்லையாகவுங் கொண்டு தனிச் சொல் பெற்று இ இப் பாவிற்குரிய ஓசையை உடையதாய் ஆசிரியச் சுரிதகத்தால் முடிவது குறளடி வஞ்சிப்பாவாகும்.

எடு:-

66

வினைத்திண்பகை விழச்செற்றவன் வனப்பங்கய மலர்த்தாளிணை நினைத்தன்பொடு தொழு தேத்தினர் நாளும்