உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/399

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

கூழை அளபெடை

4 இளங்குமரனார் தமிழ்வளம்

அளவடியின் முதல்

மூன்று

சீர்களில் எழுத்து

அளபெடுத்து நிற்றல்.

எடு:- “மாஅத் தாஅண் மோஒட் டெருமை"

கூழை இயைபு

அளவடியின் நான்கு, மூன்று,

ரண்டாம் சீர்களில்

அமைந்த எழுத்தோ சொல்லோ ஒன்றுதல்.

எடு:- “மாதர் நகிலே வல்லே யியலே”

கூழை எதுகை

அளவடியின் முதல் மூன்று சீர்களில் இரண்டாம் எழுத்து

ஒன்றிவருதல்.

எடு:- “நன்னிற மென்முலை மின்னிடை வருத்தி”

கூழை முரண்

அளவடியின் முதல் மூன்று சீர்களில் அமைந்த சொற்கள் முரணி நிற்றல்.

எடு:- “சிறிய பெரிய நிகர்மலர்க் கோதைதன்.”

கூழைமோனை

அளவடியின் முதல் மூன்று சீர்களில் முதலெழுத்து ஒன்றி

வருதல்.

எடு:- “அகன்ற வல்கு லந்நுண் மருங்கில்

கேசாதிபாதம்

கலிவெண்பாவால் முடியிலிருந்து அடிவரை பாடுவது கேசாதிபாதம் எனப் பெறும். கேசம்=முடி. (முடிமுதல் அடி) கைக்கிளை

ஒருதலைக் காமத்தை ஐந்து விருத்தப் பாக்களாற் கூறுவது கைக்கிளையாகும். ஐந்தேயன்றி முப்பத்திரண்டு பாடல்களாற் கூறுவதும் உண்டு.

கையறுநிலை

கணவன் அல்லது மனைவி இறந்தபோது அவர்கட்பட்ட அழிவுப் பொருளெல்லாவற்றையும் பிறர்க்கறிவுறுத்தி இறந்து படாதொழிந்த ஆயத்தாரும் பரிசில் பெறும் விறலியரும் தனிப்பட நின்று செயலறு நிலையைக் கூறுவது.