உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/402

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

யாப்பு

387

நொதுமலர் வேண்டி நின்னொடு

மதுகர முற்ற வாடவர் தாமே.”

சிந்தியல் வெண்பாவின் இலக்கணம்

வெண்பாவின் ஈற்றடி சிந்தடியாகவும், ஏனையடி அளவடி யாகவும் அமைய, இயற்சீர் காய்ச்சீர்களும், இயற்சீர் வெண்டளை, வெண்சீர் வெண்டளைகளும் விரவிவர, ஈற்றடியில் இறுதிக்சீர் நாள், மலர், காசு, பிறப்பு என்னும் வாய்பாடுகளுள் ஒன்றை ஏற்று செப்பலோசையுடைத்தாய் மூன்றடியால் அமைந்து நடப்பது சிந்தியல் வெண்பாவாகும். இச்சிந்தியல் வெண்பா ஒரு விகற் பத்தாலும், இருவிகற்பத்தாலும், பல விகற்பத்தாலும் வரலாம். எடு:-

“நறுநீல நெய்தலும் கொட்டியுந் தீண்டப் பிறநாட்டுப் பெண்டிர் முடிநாறும் பாரி பறநாட்டுப் பெண்டி ரடி

சிஃறாழிசைக் கொச்சகக்கலிப்பா

நேரிசை ஒத்தாழிசைக் கலிப்பாவைப்போல தரவு, தாழிசை, தனிச்சொல், சுரிதகம் என்னும் நான்கு உறுப்புகளையும் பெற்று வரும். ஆனால், இப்பாவில் தாழிசைகளுக்கிடையில் தனிச் சொல்வரும். அதுதான் இதற்கும் அதற்குமுரிய வேறுபாடு. அதாவது தரவு, தனிச்சொல், தாழிசை; தனிச்சொல், தாழிசை, தனிச்சொல், தாழிசை, தனிச்சொல் சுரிதகம் என்னும் அமைப்பில் வரும். இப்பாவில் வரும் தாழிசைகளின் ஈற்றடிச்சீர் குறைந்து வருமாயின், அப்பொழுது, இது, குறைச்சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா வாகும். தாழிசையின் அடிகள் அளவடிகளாயின் இயற்சிஃறாழிசைக் கொச்சகக் கலிப்பா எனப் பெயர் பெறும். சின்னப் பூ:-

நேரிசை வெண்பாவால் அரசனது சின்னமாகிய பத்து உறுப்புகளையும் சிறப்பித்து நூறு தொண்ணூறு, எழுபது, ஐம்பது, முப்பது என்னுந் தொகை படக்கூறுவது.

சிறப்புப் பாயிரத்திலக்கணம்:-

நூல் செய்தோன் பெயர், நூல்வந்தவழி, நூல் வழங்கும் நிலம், நூலின் பெயர், இந்நூல் முடிந்த பின்பு இந்நூல்கேட்கத் தகும் என்னும் இயைபு, நூலிற் சொல்லப்பட்ட பொருள், இந்நூல் கேட்பதற்குரியோர், இந்நூல் கேட்டலால் உண்டாகும்