உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இளங்குமரனார் தமிழ்வளம் 4.pdf/403

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

388

4 இளங்குமரனார் தமிழ்வளம்

பயன், நூல் செய்த காலம், நூல் அரங்கேற்றிய அவை, நூல் செய்தற்குரிய காரணம் ஆகிய பதினொன்றையுங் கூறுவது சிறப்புப் பாயிரமாகும்.

சீர்

அசை சிறுபான்மை தனித்தும், பெரும் பாலும் இரண்டு முதலியவாகத் தொடர்ந்தும் வருவதாம். அது ஓரசைச் சீர், ஈரசைச்சீர், மூவசைச்சீர், நாலசைச்சீர் என நான்கு வகைப்படும்.

செந்துறைச்சிதைவுத் தாழிசைக் குறள்

இரண்டடியாத் தம்முள் அளவொத்து

விழுமிய பொருளும் ஒழுகிய ஓசையுமின்றிச் செந்துறை வெள்ளையிற் சிதைந்து வருவனவெல்லாம் செந்துறைச் சிதைவுத் தாழிசைக் குறளாகும்.

எடு:-

“பிண்டியி னீழற் பெருமான் பிடர்த்தலை மண்டலந் தோன்றுமால் வாழி யன்னாய்.’

செந்தொடை

وو

எதுகை மோனையின்றி வேறுபடத் தொடுப்பது செந் தொடையாகும்.

எடு:-

“பூத்த வேங்கை வியன்சினை யேறி

மயிலின மகவு நாடன்

நன்னுதற் கொடிச்சி மனத்தகத் தோனே."

செப்பலோசை

இது வெண்பாவிற்குரிய ஓசை வெண்டளையால் விளையும் ஓசை இது. இவ்வோசை ஏந்திசைச் செப்பலோசை, தூங்கிசைச் செப்பலோசை, ஒழுகிசைச் செப்பலோசை என மூவகைப்படும். வெண்சீர் வெண்டளையான் வரும் வெண்பா ஏந்திசைச் செப்பலோசையைப் பெறும். இயற்சீர் வெண்டளையான் வரும் வெண்பா தூங்கிசைச் செப்பலோசையைப் பெறும். இயற்சீர், வெண்சீர் வெண்டளைகள் கலந்து வரும் வெண்பா ஒழுகிசைச்

செப்பலோசையைப் பெறும்.